சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியான திபெத்திற்கு சென்றார் ஜி ஜின்பிங்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
பீஜிங்: கடந்த பல ஆண்டுகளாக சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக திபெத் இருந்து வருகிறது. கடந்த 1951ம் ஆண்டு, அமைதியான வழியில் சுதந்திரம் அடைந்துவிட்டதாக திபெத் அறிவித்தது.ஆனால், 'தங்களின் கட்டுப்பாட்டில் தான் திபெத் உள்ளது' என, சீனா தொடர்ந்து தெரிவித்தது. மேலும், மத ரீதியாக சீனா தங்களை ஒடுக்கி வருவதாகவும் கலாசாரத்தை மெதுவாக அழித்துவருவதாகவும் சீனாவால் நாடு

பீஜிங்: கடந்த பல ஆண்டுகளாக சீனாவின் சர்ச்சைக்குரிய பகுதியாக திபெத் இருந்து வருகிறது. கடந்த 1951ம் ஆண்டு, அமைதியான வழியில் சுதந்திரம் அடைந்துவிட்டதாக திபெத் அறிவித்தது.



latest tamil news



ஆனால், 'தங்களின் கட்டுப்பாட்டில் தான் திபெத் உள்ளது' என, சீனா தொடர்ந்து தெரிவித்தது. மேலும், மத ரீதியாக சீனா தங்களை ஒடுக்கி வருவதாகவும் கலாசாரத்தை மெதுவாக அழித்துவருவதாகவும் சீனாவால் நாடு கடத்தப்பட்ட திபெத்தியர்கள் குற்றம்சாட்டினர்.


latest tamil news




30 ஆண்டுகளில்...


இந்நிலையில், அதிபரானதற்கு பிறகு முதல்முறையாக ஜி ஜின்பிங் திபெத்திற்கு சென்றுள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் முதல்முறையாக சீனா அதிபர் அங்கு செல்வது இதுவே முதல்முறை. இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோவில், பாரம்பரிய உடைகளை அணிந்த திபெத்தியர்கள் சீன கொடியுடன் ஜின்பிங்கை வரவேற்பதை காணலாம். விமான நிலையத்தில் சிகப்பு கம்பலத்துடன் அவர் வழி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 21ம் தேதி ஜின்பிங் அங்கு சென்றிருந்தாலும், இன்றுதான் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202123:42:59 IST Report Abuse
M  Ramachandran இந்த யோக்ய சிகாமணி எப்போ திபேத்தில் காலடி வைத்தானோ சீனாவில் வெள்ளம் கரைபுரண்டோடி மக்களை திண்டாட செய்து விட்டது. இன்னும் இருக்கிறது. மூர்க்கங்கள் பொல இந்த ஜென்மங்களும் மக்களை காவு கொடுக்கிறது.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
24-ஜூலை-202114:45:29 IST Report Abuse
திரு.திருராம் அவரே செட்டப் செய்த திபேத்தியர்கள்?
Rate this:
Cancel
23-ஜூலை-202118:52:04 IST Report Abuse
அப்புசாமி தலாய் லாமாவுக்கு வாழ்த்து தெரிவிச்சதின் எதிரொலி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X