அரசியல் செய்தி

தமிழ்நாடு

பாதுகாப்புக்கு தனிப்பட்டியல் உள்ளதா? தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (105)
Share
Advertisement
சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல்
BJP, Annamalai, MohanBhagwat, RSS, Madurai, Corporation, பாஜக, அண்ணாமலை, ஆர்எஸ்எஸ், மோகன் பகவத், மதுரை, மாநகராட்சி, கண்டனம்

சென்னை: ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தின் மதுரை வருகையை ஒட்டி சாலைகளை சீரமைக்க உத்தரவிட்ட, மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‛யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா?,' எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அமைப்பின் நிர்வாகிகளையும் பொதுமக்களையும் சந்திப்பது வழக்கமான ஒன்று. இவருக்கு உயர்மட்ட பாதுகாப்பான இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்.எஸ்.எஸ்., முதன்மையாக திகழ்கிறது. அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவை ஆற்றுகிற அமைப்பாக ஆர்எஸ்எஸ் விளங்குகிறது.


latest tamil news


மோகன் பகவத், மதுரை, கன்னியாகுமரி பகுதிகளில் 22 முதல் 26-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இவர் மதுரை வருகைக்கான ஏற்பாடுகளை அங்குள்ள அரசு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாட்டின் ‛அதி உயர் பாதுகாப்பு' கொண்ட தலைவர் வருகையின்போது வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை பின்பற்றி மதுரை மாநகராட்சி நிர்வாகிகள் செயல்பட்டுள்ளனர். இதற்கென மதுரை மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்ததக்கது, கண்டிக்கத்தக்கது.

யார் யார் வந்தால் என்னென்ன பராமரிப்பு, பாதுகாப்பு என்பதற்கு தமிழக அரசு தனியாக பட்டியல் வைத்திருக்கிறதா? பாதுகாப்பு பட்டியலில் இருக்கும் தலைவர்கள் வரும்போது அவர்களுக்கு உரிய வசதி செய்து கொடுப்பது சட்ட விரோதமா? இந்த நடவடிக்கையின் மூலம் அரசு அதிகாரிகள் எந்த வகையில் செயல்பட வேண்டும் என தமிழக அரசு விரும்புகிறது என்று புரியவில்லை.


latest tamil news


திமுக.,வின் சாமானியத் தலைவர்கள் சென்றால் கூட, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று சாலை சீரமைப்பு, அனைத்து விதமான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அரசு தாங்கள் விரும்பாத அமைப்பின் மிக முக்கியமான தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை வழக்கம்போல் செய்த அதிகாரிக்கு தண்டனை கொடுப்பது நியாயமா? மேலும் இத்தகைய நடவடிக்கை தவறான முன்னுதாரணம் ஆகிவிடும்.

தமிழக அரசு நேர்மையாக பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால் துணை ஆணையர் சண்முகம் பணிவிடுவிப்பு ரத்து செய்யபட வேண்டும். இல்லையென்றால் திமுக ஆட்சியின் ஒருதலைபட்சமான செயலையும், அதிகாரிகளை பழிவாங்குகிறது செயலையும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (105)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
24-ஜூலை-202102:38:18 IST Report Abuse
LAX //எதற்கெடுத்தாலும் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாக போயிடும் என்று தான் ரஜினி சொல்லி இருக்கிறார்.. ஆரோக்கியமான வளரச்சி பணிகளில் கவனம் செலுத்துங்கள்.. மக்களால் அமைந்த அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள்..// விசு ஐயர் வாள்.. நீங்க/உங்களைப்போன்று இப்போ வேதாந்தம் பேசறவாளெள்லாம் இதையே கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப்பாருங்கோ.. > 'கோவிட் தளர்வுகளின் போது டாஸ்மாக் திறப்பதை எதிர்த்து போராட்டம்?? ' என்பது வரை என்னென்ன அலப்பறைகள் இந்து குடும்ப கம்பேனி நடத்தியது னு இன்று/நாளை வரைக்கும் மக்கள் வெச்சு செஞ்சுண்டு இருக்கா.. மழை வெயில் எதையும் பொருட்படுத்தாத 'ஜென்மங்கள்தான்' தானை & கோ. வுக்கு ஓட்டு போடுறோம்.. என்கிற ரீதியில்.. உம்மைப் போன்ற சிலதுகள் அநியாயம் செஞ்சு ஆட்டய போடுறவாளுக்கு சொம்பு தூக்கறேள்.. இந்த லட்சணத்துல.. தாங்கள் தனிப்பட்ட வகையில் தேன் எடுக்கும்போது புறங்கையை நக்கும் ஆட்களாக இருந்தாலும், நேர்மைக்கும் உண்மைக்குமான இடத்தில் பக்குவமாக பயிற்சி பெற்று வந்தவர்களுடன் அணுசரணையாக இருந்து மாநிலத்துக்கு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டவர்களைப்பார்த்து கூச்சமே இல்லாம தமிழகம் தலைநிமிர்ந்தது ங்கற வார்த்தையை எப்படித்தான் சொல்றேளோ.. உங்க சுயநலத்துக்காக ஒரு குடும்பத துக்கு கூஜா தூக்கறத விட.. தமிழக மககள் நலனுக்காக இந்தியத் தலைமைக்கு தலை வணங்கினா தப்பில்ல.. ஒரு வேளை நீரும் உம்மைப்போன்ற கபடதாரிகளும் இந்த மாதிரி பெயரில் ஒளிந்து கொண்டு வீர வசனம் பேசுகிறீர்களோ என்னவோ ன்ற சந்தேகமும் எழாமலில்லை..
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
24-ஜூலை-202111:07:13 IST Report Abuse
Visu Iyerஉங்கள் கருத்தில் பிழை என்று சொல்ல மாட்டேன்.. காரணம் கருத்து சொல்ல உங்களு உரிமை உள்ளது.. ஆனால் அதில் உண்மை இல்லை என்று சொல்ல முடியும் என்பதை புரிந்து கொண்டால் மகிழ்ச்சி.. மேம்பாலம் பல கண்ட சென்னையிலே மேம்பாடு நாம் காண வைத்தது கழக ஆட்சி என்பதை ஒவ்வொரு மானமுள்ள தமிழரும் உணர்வார்கள்.. யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியமோ தேவையோ இல்லை.. நாங்கள் கட்சியை சாராதவர்கள் வேத அத்யயனம் செய்த ஸ்மார்த்த பிராமணர்கள் என்பதை சொல்லி உங்களுக்கு புரியவைக்க வேண்டிய அவசியமும் இல்லை.. கற்று கொடுக்கும் இனம் தான் தமிழீனம் அவர்கள் அன்புக்கும் நீதிக்கும் தான் தலை வணங்குவார்கள் நீங்கள் சொல்லும் தலை வணங்கினால் ... என்பதற்கு அவசியமோ தேவையோ இல்லை.....
Rate this:
Cancel
Perumal - Chennai,இந்தியா
23-ஜூலை-202123:06:30 IST Report Abuse
Perumal Janarthana,are you not ashamed that you are a sanghi.Go and do padha Pooja to rss fellow.
Rate this:
Cancel
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
23-ஜூலை-202120:54:18 IST Report Abuse
Kanthan Iyengaar பருக் அப்துல்லாவுக்கு என்ன அளவு பாதுகாப்பு வ்வொய்? அவா மதுரை வந்தா கூட இப்படி ரோடெல்லாம் சுத்தம் செய்வாளா? மோகன் பகவட்டுக்கும் பரூக் அப்துல்லாவுக்கும் ஒரே அளவு பாதுகாப்பு தானே வ்வொய்? இப்போ கங்கண ராணாவட்டுக்கு கூட பாதுகாப்பு கொடுத்திருக்கா வ்வொய்...அவா வந்தா கூட ரோடெல்லாம் சுத்தம் செய்வாளோ?? அவ்வளவு என் வ்வொய்?முகேஷ் அம்பானிக்கு கூட இதே பாதுகாப்பு தான்.. அவா வந்தா கூட இதே ரோடெல்லாம் சுத்தம் செய்வாளோ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X