அரசியல் செய்தி

தமிழ்நாடு

அறநிலையத்துறை கோவில்கள் தனியார் சொத்துக்கள் அல்ல: அமைச்சர் சேகர்பாபு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (42)
Share
Advertisement
சென்னை: அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்கள் எல்லாம் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும், அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க முடியாது எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.இந்துக் கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அறநிலையத்துறைகளைக் கலைக்கக் கோரி பா.ஜ.,
Sekarbabu, Minister, Temples, Private, சேகர்பாபு, அறநிலையத்துறை,கோவில்கள், தனியார்

சென்னை: அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்கள் எல்லாம் தனியார் சொத்துக்கள் அல்ல என்றும், அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனியாருக்கு வழங்க முடியாது எனவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்துக் கோவில்களை இந்து அமைப்பின் அறக்கட்டளை வசம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அறநிலையத்துறைகளைக் கலைக்கக் கோரி பா.ஜ., நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளது. கிறித்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களது வழிபாட்டுத்தலங்களின் சொத்துக்களை அறக்கட்டளை மூலம் எப்படி நிர்வாகம் செய்கிறார்களோ அதே போல இந்து கோவில்களையும் அறக்கட்டளை மூலம் நிர்வாகம் செய்ய வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:


latest tamil news


அறநிலையத்துறை நிர்வகிக்கும் கோவில்கள் எல்லாம் தனியார் சொத்துக்கள் அல்ல. அரசு சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பை எப்படி தனியாருக்கு வழங்க முடியும்? குறைகள் இருந்தால் சுட்டிகாட்டுங்கள், குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம். பல கோயில்கள் உலகமே வியக்கும் வகையில் மன்னராட்சி காலத்தில் கட்டப்பட்டது. கோயிலுக்கு தேவையான நிலங்கள் மன்னர்கள், செல்வந்தர்களால் தானமாக வழங்கப்பட்டது. தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகளை மீட்க முதல்வர் புதிய திட்டத்தை அறிவிப்பார். அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KumariKrishnan Bjp - chennai,இந்தியா
23-ஜூலை-202122:51:57 IST Report Abuse
KumariKrishnan Bjp சிலைதிருட்டு நடந்ததே திமுக தொடர்பில்தான் அப்படி இருக்கையில் எப்படி திமுக சிலை திருட்டை கண்டுபிடிக்கும்? கோயில் சொத்து அரசு சொத்தும் அல்ல தனியார் சொத்தும் அல்ல அது கடவுளின் சொத்து ஹிந்து கடவுளின் சொத்தை பராமரிக்கும் உரிமை மதசார்பற்ற அரசு என சொல்லிக்கொண்டு கிருஸ்தவ முஸ்லீம் சார்பாக நடந்துக்கொள்ளும் திமுக அரசுக்கு கண்டிப்பாக இல்லை அதை பரமாரிக்கும் உரிமை கடவுளின் பக்தர்களைக்கொண்ட அரசு அங்காரம் பெற்ற அறக்கட்டளைக்கே இருக்கிறது - குமரிகிருஷ்ணன்
Rate this:
Cancel
s t rajan - chennai,இந்தியா
23-ஜூலை-202122:42:51 IST Report Abuse
s t rajan அது சரி முன்னாள் தாதா அவர்களே, எப்படி வடபழனி முருகன் நிலத்தை மசூதிக்கு தானம் செய்ய முன்வந்தீர் ?
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஜூலை-202120:56:52 IST Report Abuse
Kasimani Baskaran கோவில் என்று அரசாங்கச்சொத்தானது? அப்படியே சர்ச், மசூதியெல்லாம் அரசாங்கச்சொத்து என்று சொல்ல வேண்டியதுதானே. மதசார்பற்ற அரசுக்கு கோவிலில் வேலையே கிடையாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X