சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல்லடம் அருகே முகாமிட்டுள்ள 'நரிகள்': விவசாயிகள் அதிர்ச்சி

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பல்லடம்: பல்லடம் அருகே, கரடிவாவி கிராமத்தில் முகாமிட்டுள்ள நரிகளால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரடிவாவி நந்தவனம் தோட்டம் பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. நீண்ட காலமாக பராமரிக்கப்படாத அக்குட்டையில், பத்துக்கும் மேற்பட்ட நரிகள் முகாம் இட்டுள்ளன. விவசாயிகள் கூறியதாவது: நந்தவன குட்டை பல ஆண்டுகளாக
பல்லடம் அருகே முகாமிட்டுள்ள 'நரிகள்': விவசாயிகள் அதிர்ச்சி

பல்லடம்: பல்லடம் அருகே, கரடிவாவி கிராமத்தில் முகாமிட்டுள்ள நரிகளால், விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த கரடிவாவி நந்தவனம் தோட்டம் பகுதியில், 50 ஏக்கர் பரப்பளவில் குட்டை உள்ளது. நீண்ட காலமாக பராமரிக்கப்படாத அக்குட்டையில், பத்துக்கும் மேற்பட்ட நரிகள் முகாம் இட்டுள்ளன.

விவசாயிகள் கூறியதாவது: நந்தவன குட்டை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாததால், குட்டைக்குள் ஏராளமான கருவேல மரங்கள் வளர்ந்து குருங்காடு உருவாகியுள்ளது. குட்டைக்குள் கடந்த சில மாதங்களாக பத்துக்கும் மேற்பட்ட நரிகள் வசிக்கின்றன. அவை எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. நரிகள், இங்குள்ள ஆடுகள் சிலவற்றை கடித்து குதறியதில், சில ஆடுகள் இறந்துள்ளன. மேலும் சில ஆடுகள், கோழிகள் காணாமல் போயுள்ளன. அதன் காரணமாக குட்டைக்குள் யாரும் ஆடு மேய்க்க செல்வதில்லை.

நேற்று முன்தினம் இரவு, ஆட்டுக்குட்டி ஒன்றை நரிகள் கடித்து திண்றுவிட்டன. விளைநிலம் அருகே ஏராளமான நூறு நாள் திட்ட பணியாளர்கள் வேலை பார்ப்பதுடன், குழந்தைகளும் அவ்வப்போது வெளியே வந்து விளையாடுவது வழக்கம்.

மேலும், இப்பகுதியில் ஏராளமான ஆடு, மாடுகள் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு முகாமிட்டுள்ள நரிகளால் பாதுகாப்பற்ற சூழல் உருவாகி உள்ளது. இது தொடர்பாக வனத்துறைக்கு ஏற்கனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில், உடுமலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில்தான் அதிக அளவிலான வன விலங்குகள் வசிக்கின்றன. மாவட்டத்துக்கு உட்பட்ட சில பகுதிகளில் மான்கள், மயில்களும் உள்ளன. ஆனால், கரடிவாவி பகுதியில் திடீரென நரிகள் வந்தது எப்படி என்று தெரியவில்லை. நரிகள் முகாமிட்டுள்ளது, அப்பகுதி விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நரிகளை பிடித்து செல்வதுடன், புதர் மண்டிக்கிடக்கும் குட்டையை தூர்வாரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
28-ஜூலை-202116:45:11 IST Report Abuse
Girija ஐம்பது ஏக்கர் அளவில் குட்டை இருந்ததாம், அருகிலேயே நூறு நாள் பணிகள் (சேர்ந்து தூங்கும் அரட்டை அடிக்கும் பணிகள்) நடை பெருகிறதாம், திருப்பூரில் தண்ணி கஷ்டமாம், இருந்தும் மழை நீர் சேகரிக்க தோன்றவில்லையாம் .,
Rate this:
Cancel
kudiyanavan - coimbatore ,இந்தியா
26-ஜூலை-202109:48:19 IST Report Abuse
kudiyanavan தீய முக வும், நரிகளும் பெருகுவது நாட்டுக்கும் , மக்களுக்கும் ஆபத்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X