மஹாராஷ்டிராவில் கனமழை; நிலச்சரிவில் சிக்கி 36 பேர் பலி

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 36 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலர் நிலச்சரிவில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரெய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை
Maharashtra, Raigad, Landslides, Dead, Several Missing; Rescue, மஹாராஷ்டிரா, கனமழை, நிலச்சரிவு, உயிரிழப்பு

மும்பை: மஹாராஷ்டிராவின் ரெய்காட் மாவட்டத்தில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 36 பேர் உயிரிழந்தனர், மேலும் சிலர் நிலச்சரிவில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மஹாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாக மிக கனமழை பெய்து வருகிறது. அதுவும் கடந்த இரண்டு நாட்களாக கரையோர மாவட்டங்களான ரெய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் ஆகிய இடங்களில் தொடர் மழையால் நிலைமை மிகவும் மோசமானது. அப்பகுதியில் உள்ள வஷிஸ்தி, ஜக்புடி மற்றும் கஜலி நதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் பல கிராமங்களும் சிறு நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ரெய்காட் மாவட்டத்தில் கனமழையால் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர்.


மும்பை அருகே பலத்த மழை நிலச்சரிவில் 36 பேர் பலி

latest tamil news



நிலச்சரிவில் பலரும் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. கனமழை பெய்து வரும் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் பணியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். நீர் சூழ்ந்த இடங்களில் உள்ள வீடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்க இந்திய கடற்படையின் உதவியும் நாடப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X