தலிபான்களை ஒடுக்க ஆப்கனில் மீண்டும் களமிறங்கிய அமெரிக்கா| Dinamalar

தலிபான்களை ஒடுக்க ஆப்கனில் மீண்டும் களமிறங்கிய அமெரிக்கா

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (11)
Share
வாஷிங்டன்: தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. 'வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மொத்தமாக அமெரிக்க படைகள் வெளியேறிவிடும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின், 17 மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2 மாதத்தில்

வாஷிங்டன்: தலிபான்களுடன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன்படிக்கையின் ஓர் அங்கமாக, அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து விலகி வருகின்றன. 'வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் மொத்தமாக அமெரிக்க படைகள் வெளியேறிவிடும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, தலிபான்கள் ஆப்கானிஸ்தானின், 17 மாகாணங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2 மாதத்தில் ஏராளமான ராணுவத்தினர் கொல்லப்பட்டு உள்ளனர்.



latest tamil news



தலிபான்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஆப்கன் அரசு படைகளுக்கு ஆதரவாக தலிபான்களை பின்னுக்கு தள்ள சமீபத்தில் விமான படை தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்து உள்ளதாவது:


ஆப்கன் படைகளுக்கும் ஆப்கன் அரசுக்கும் உதவுவதில் அமெரிக்கா உறுதி பூண்டுள்ளது. கடந்த சில நாள்களாக, ஆப்கன் தேசிய பாதுகாப்பு படைக்கு ஆதரவாக விமான படை மூலம் தாக்குதல் நடத்தினோம். ஆப்கன் படைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து விமான படை தாக்குதல் நடத்தி வருகிறோம். அமெரிக்க ராணுவத்தின் மத்திய பிரிவு தளபதி கென்னத் மெக்கென்சி இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


latest tamil news



அமெரிக்க வான்வழித் தாக்குதலால் இதுவரை 5 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 30 நாட்களில் 6 முதல் 7 தாக்குதல்களை அமெரிக்கா நடந்தியுள்ளது. அவை அதிநவீன டுரோன் தாக்குதல்களாக இருந்தன. ஆப்கன் பாதுகாப்பு படைகளிடமிருந்து தலிபான்கள் கைப்பற்றிய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக ஆப்கன் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X