அமேசான், பிளிப்கார்ட்டுக்கு எதிராக விசாரணை நடத்தலாம்: கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
பெங்களூரு: அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டி சட்டங்களை மீறியதாக எழுந்த புகாரில், தங்கள் மீதான விசாரணைக்கு தடை கோரின. அவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டும் என இன்று தீர்ப்பளித்தது.ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நேர்மையான வர்த்தக போட்டியில் ஈடுபடுவதில்லை என்ற புகார் சிறு வணிகர்களால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது.
Amazon, Flipkart, Enquiry, CCI, Karnataka HC, அமேசான், பிளிப்கார்ட், விசாரணை, கர்நாடகா, உயர்நீதிமன்றம்

பெங்களூரு: அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள் போட்டி சட்டங்களை மீறியதாக எழுந்த புகாரில், தங்கள் மீதான விசாரணைக்கு தடை கோரின. அவ்வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணையை எதிர்க்கொள்ள வேண்டும் என இன்று தீர்ப்பளித்தது.

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் நேர்மையான வர்த்தக போட்டியில் ஈடுபடுவதில்லை என்ற புகார் சிறு வணிகர்களால் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. போட்டியிட முடியாத அளவுக்கு விலையை குறைப்பது போன்ற முறைகேடுகளில் அவை ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி டில்லி வியாபாரிகள் சங்கம் இந்திய போட்டி ஆணையத்திடம் 2019-ல் புகார் அளித்தது. அதனை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அமேசான், பிளிப்கார்ட் வழக்கு தொடர்ந்தன.


latest tamil news


முதலில் இவ்வழக்கை விசாரித்த ஒரு நீதிபதியடங்கிய அமர்வு, ஜுன் 11-ல் இந்திய போட்டி ஆணையம் விசாரணை நடத்தலாம் என தீர்ப்பளித்தது. அதனை எதிர்த்து வேறு அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் சதீஷ் சந்திர சர்மா, நடராஜ் ரங்கசாமி ஆகியோர் கொண்ட அமர்வு இரு நிறுவனங்களின் மனுவை விசாரித்தன. தீர்ப்பை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தன.

அதன்படி இன்று வெளியிடப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது: ‛போட்டி ஆணையத்தின் விசாரணையை ஆரம்ப கட்டத்திலேயே தடுக்க முடியாது. இரு இ-காமர்ஸ் நிறுவனங்களின் அணுகுமுறையும் விசாரணை இறுதிக்கட்டத்துக்கு வரக்கூடாது என பார்த்துக்கொள்ளும் முயற்சியாகவே தெரிகிறது. இரு நிறுவனங்களின் மனுவும் தகுதியும், மதிப்பும் அற்றது. தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட எந்த காரணமும் தெரியவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது,'. என்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X