பொது செய்தி

இந்தியா

ஆகாஷ்-என்ஜி ஏவுகணை சோதனை வெற்றி

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
புதுடில்லி: தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்ஜி) வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.தரையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும் ஆகும்.இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி
DRDO, Akash-NG, Missile, Balasore, ஆகாஷ், ஏவுகணை, டிஆர்டிஓ, சோதனை,

புதுடில்லி: தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய தலைமுறை ஆகாஷ் ஏவுகணை(ஆகாஷ்-என்ஜி) வெற்றிகரமாக பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது.

தரையில் இருந்து 30 கி.மீ., தூரத்தில் வானில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது சோதனை இதுவாகும் ஆகும்.


latest tamil news


இது தொடர்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(டிஆர்டிஓ) வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: புதிய தலைமுறை ஏவுகணையான ஆகாஷ் ஏவுகணை இன்று(ஜூலை23) காலை 11:45 மணிக்கு, ஒடிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஒருங்கிணைந்த பரிசோதனை மையத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. ஆளில்லாத வானில் இருந்த இலக்கை, ஏவுகணை வெற்றிகரமாக தாக்கியது.

மழை அல்லது வெயில் காலத்திலும் இந்த ஏவுகணையை ஏவ முடியும். இந்திய விமானப்படை அதிகாரிகள், பெல் மற்றும் பிடிஎல் நிறுவன அதிகாரிகளும் இந்த சோதனையில் கலந்து கொண்டனர். ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்து உள்ளார். விஞ்ஞானிகளுக்கு டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டியும் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X