டோக்கியோ ஒலிம்பிக் கோலகல துவக்கம்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக துவங்கியது.டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23) கோலகலமாக துவங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்குமு் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127
Olympics, TokyoOlympics2020, Tokyo, India, ஒலிம்பிக், டோக்கியோ, துவக்கம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக துவங்கியது.

டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23) கோலகலமாக துவங்கியது. கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி கடும் கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்குமு் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news


இன்றைய துவக்க விழாவில், ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். ஒலிம்பிக் துவக்க விழா அணிவகுப்பில் இந்தியாவின் சார்பில் 19 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத்சிங் தேசியக் கொடியை ஏந்திச்சென்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X