பொது செய்தி

இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 12 மத்திய பல்கலை துணை வேந்தர்கள் நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
புதுடில்லி: தமிழகம் உட்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மத்தியக் கல்வி அமைச்சகம் துணைவேந்தர்களை நியமித்ததற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‛தற்போது 12 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்ததற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில்
Central Universities, VCs, Appointment, President, Ramnath Kovind, Approves

புதுடில்லி: தமிழகம் உட்பட 12 மத்தியப் பல்கலைக்கழகங்களில் மத்தியக் கல்வி அமைச்சகம் துணைவேந்தர்களை நியமித்ததற்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுகுறித்து மத்தியக் கல்வி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‛தற்போது 12 மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர்களை மத்தியக் கல்வி அமைச்சகம் நியமித்ததற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இதில் ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு, ஜார்க்கண்ட், கர்நாடகா, தமிழகத்தில் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம், ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news


அதேபோல கயாவில் உள்ள தெற்கு பிஹார் மத்தியப் பல்கலைக்கழகம் , மணிப்பூர் பல்கலைக்கழகம், மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக்கழகம், வடகிழக்கு மலை பல்கலைக்கழகம், பிலாஸ்பூர் மத்தியப் பல்கலைக்கழகம் மற்றும் குரு காசிதாஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் புதிய துணைவேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


திருவாரூர் பல்கலை


மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றி வரும் கிருஷ்ணனை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமனம் செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்த பதவியில் இருப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X