பொது செய்தி

இந்தியா

திருப்பதியில் டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம்: தேவஸ்தானம் முடிவு

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திருப்பதி: திருப்பதி கோயிலை டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், டிஆர்டிஓ தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.ஜம்முவில் உள்ள விமான படை தளத்தில் டுரோன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை டிஆர்டிஓ வேகப்படுத்தி உள்ளது.
திருப்பதி, டுரோன், தொழில்நுட்பம்,

திருப்பதி: திருப்பதி கோயிலை டுரோன் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் வகையில், டிஆர்டிஓ தயாரித்துள்ள டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பொருத்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

ஜம்முவில் உள்ள விமான படை தளத்தில் டுரோன் மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை டிஆர்டிஓ வேகப்படுத்தி உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்த தொழில்நுட்ப செயல் விளக்க கூட்டம், கர்நாடக மாநிலம் கோலாரில் கடந்த 6 ம் தேதி நடந்தது. முப்படை அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில், திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் ஊழல் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு துறை தலைவர் கோபிநாத்தும் கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து, அந்த டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை வாங்க தேவஸ்தானம் முடிவு செய்தது. அத்துமீறி வரும் டுரோன்களை கண்டுபிடித்து, அதனை தடுத்து நிறுத்தி அழிக்கும் வகையில், டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ தயாரித்து உள்ளது. 4 கி.மீ., தூரத்தில் வரும் டுரோனை கண்டறியும் இந்த தொழில்நுட்பம், அதன் தொலைதொடர்பு வசதியை துண்டித்து 3 கி.மீ., தொலைவில் அழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஒரு அமைப்பின் விலை தற்போது ரூ.25 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 100 அல்லது அதற்கு மேல் கொள்முதல் விலை செய்தால், ஒரு அமைப்பின் விலை ரூ.22 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.


latest tamil news


இந்த தொழில்நுட்பத்தை தயாரித்து உள்ள டிஆர்டிஓ, அதனை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கான உரிமத்தை பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவனத்திடம் வழங்கி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை அதிகளவில் தயாரித்து, விலையை குறைக்கும் வகையில், பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

திருப்பதி தேவஸ்தானம் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியின் ஆலோசனையை தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த தொழில்நுட்பத்தை வாங்குவது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shjsj -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202109:43:16 IST Report Abuse
shjsj how to waste money we can learn from the this kind of organization supported by govt, they can use the his money for feed people and for living beings, cant be recieve food.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
23-ஜூலை-202120:33:18 IST Report Abuse
Ramesh Sargam நாட்டின் எல்லா முக்கிய இடங்களிலும் இது போன்று டுரோன் எதிர்ப்பு தொழில்நுட்பம் வரவேண்டும். நாட்டின் பாதுகாப்பு மிக மிக முக்கியம். ஆமாம், உள்ளூரில் இருக்கும் தேச துரோகிகளை, குறிப்பாக இரண்டு தினங்களுக்கு முன்பாக ஒரு 'பாதிரியார்' நம் பாரத மாதாவை பற்றி இழிவாக பேசினானே, அவன் போன்ற தேச துரோகிகளிடமிருந்து நாட்டை எப்படி காப்பாற்றவேண்டும் என்று நாம் சிந்திக்கவேண்டும். அவர்களை ஒழித்துக்கட்ட ஒரு தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X