பொது செய்தி

இந்தியா

எழுந்து நின்று கைதட்டி உற்சாகப்படுத்திய பிரதமர் மோடி: வைரலாகும் வீடியோ

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது. தேசிய கொடி ஏந்தி வந்த நமது வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடிடோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23) கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள்
Prime Minister Narendra Modi stands up to cheer athletes as the Indian contingent enters எழுந்து ,நின்று  கைதட்டி  உற்சாகம், பிரதமர் மோடிOlympic Stadium in Tokyo during the opening ceremony.

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா இன்று கோலகலமாக துவங்கியது. தேசிய கொடி ஏந்தி வந்த நமது வீரர்களை கைதட்டி உற்சாகப்படுத்தினார் பிரதமர் மோடி

டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டி இன்று (ஜூலை 23) கோலகலமாக துவங்கியது. இந்தியா உள்பட 205 நாடுகளை சேர்ந்த 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியா சார்பில் 127 வீரர், வீராங்கனைகள் 18 போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.


latest tamil newsஇந்நிலையில் இன்று நடந்த துவக்க விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்ப்ரீத்சிங் உள்ளிட்ட 19 வீரர்கள் மட்டுமே தேசியக் கொடியை ஏந்திச்சென்றனர்.
நேரடி ஒளிபரப்பை தனது அலுவலக இல்லத்தில் டி.வி.யில் பார்த்துக்கொண்டிருந்த பிரதமர் மோடி , தேசிய கொடியுடன் அணிவகுத்து மைதானத்திற்குள் நமது வீரர்கள் நுழைந்தவுடன், நாற்காலியிலிருந்து எழுந்து நின்று கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார். இதன் வீடியோ காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-202109:29:20 IST Report Abuse
Paraman இந்த புது ஒளிபரப்பு துறை மந்திரி தாகூரின் வரம்பு மீறிய செயல் நேற்றைக்கு எனக்கு மிகவும் எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்தது நமது விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து நம் தேசிய கொடி பிடித்து அரங்கத்தினுள் வரும்போது அவர்களை சரியாக காட்டாமல் இந்த விளம்பர பிரியன் தாகூரை போற்றி பாடி அவன் இளித்து கொண்டு இருப்பத காட்டியது கொடுமை, மகா அசிங்கம். இதை மோடி வேற எழுந்து நின்னு கை தட்டியது அதை விட கேவலம். இந்த நாடே அத்தருணத்தில் விளையாட்டு வீரர்களை தான் காண காத்திருந்த நேரத்தில் இந்த தாகூர் மந்திரி தன்னை விளம்பர பரப்படுத்தி கொண்டது படு கீழ்த்தரமான செயல். இவர் ஏற்கனவே ஹிமாச்சலில் இவன் தந்தை முதலைவராக இருந்தபோது ஹிமாச்சல் கிரிக்கெட் சங்க தலைவராக தன்னையே நியமித்து கொண்டு அந்த ரஞ்சி அணிக்கு தன்னையே காப்டனாக நியமித்து கொண்டவன். பாகிஸ்தானிலோ. ஆப்கானிஸ்தானிலோ இருக்கவேண்டிய இது போன்ற ஊழல் ஆட்களை மந்திரியாக வைத்து இருக்கும் மோடி எந்த விதத்தில் மக்குமோஹனை விட உயர்ந்தவர்?.
Rate this:
Cancel
24-ஜூலை-202109:25:17 IST Report Abuse
அப்புசாமி நாமதான் வசுதைவ குடும்பகமாச்சே... எல்லோருக்கும் சேத்து கைதட்டணுமே... பெரிய மெடலா குத்துங்கப்பா...
Rate this:
Cancel
Dharma - Madurai,இந்தியா
24-ஜூலை-202108:44:14 IST Report Abuse
Dharma இங்கே ஐயர் ஐயங்கார் னு பெயர் போடுறவனெல்லாம் யாருன்னே தெரியலே
Rate this:
Kanthan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா
24-ஜூலை-202110:02:18 IST Report Abuse
Kanthan Iyengaarஎன்னை தெரியல்ன்னு காமெடி செய்யாதேள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X