பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 1,830 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,828 பேரும், பிற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 1,830 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,516 பேர் குணமடைந்து உள்ளனர்.தமிழகத்தில் கடந்த 58 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 72 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் மட்டும் 1,828 பேரும், பிற மாநிலத்தவர் 2 பேரையும் சேர்த்து 1,830 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 24 பேர் உயிரிழந்து உள்ளனர். 2,516 பேர் குணமடைந்து உள்ளனர்.



latest tamil news




தமிழகத்தில் கடந்த 58 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 72 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப் பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 35,008 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப் பட்டன. அதில், 1,830 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,44,870 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,62,48,758 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 1,062 பேர் ஆண்கள், 768 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,86,933 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 10,57,899 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2,516 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,86,192 ஆக உயர்ந்துள்ளது.

24 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில்,6 பேர் தனியார் மருத்துவ மனையிலும், 18 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,862 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
24-ஜூலை-202107:44:12 IST Report Abuse
அம்பி ஐயர் இப்படி பொய்யான தகவல்களைக் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.... உண்மை என்னன்னு அரசாஙத்திற்கும் அந்தந்தப் பகுதி மக்களுக்கும் நன்றாகவே தெரியும்.....உலகம் முழுவதும் 3-வது 4 வது அலைகள் மிக வேகமாக பரவி மக்களப் பலிவாங்குகிறது.... இங்கு மட்டு மெல்லாம் நார்மல் என்றால் எப்படி நம்புவது....???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X