சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

நடக்கிற காரியமா?

Added : ஜூலை 23, 2021
Share
Advertisement
நடக்கிற காரியமா?'இவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் குறை கூறத்தான் செய்வர்' என, உத்தர பிரதேச மாநில பா.ஜ., நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் கட்சியின் மேலிட தலைவர்கள். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, இங்குள்ள பல்வேறு சமூகத்தினரின் ஓட்டுகளை

 அக்கம் பக்கம்


நடக்கிற காரியமா?



'இவர்களுக்கு எவ்வளவு செய்தாலும் குறை கூறத்தான் செய்வர்' என, உத்தர பிரதேச மாநில பா.ஜ., நிர்வாகிகள் மீது கடும் கோபத்தில் உள்ளனர் கட்சியின் மேலிட தலைவர்கள். உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, இங்குள்ள பல்வேறு சமூகத்தினரின் ஓட்டுகளை கவர்வதற்காக சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை மாற்றத்தில் இந்த மாநிலத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி தரப்பட்டது. உ.பி.,யில் உள்ள பா.ஜ., நிர்வாகிகளுக்கு இது திருப்தியை தரவில்லை. 'சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நமக்கு வெற்றி கிடைத்தாலும், சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியை அளித்தது.
'இந்த சூழ்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க வேண்டுமானால், அனைத்து சமூகத்தினரையும் திருப்திப் படுத்த வேண்டும்.'ஆனால் அமைச்சரவை மாற்றத்தில், பிராமண சமூகத்தில் செல்வாக்கு பெற்ற ஜிதின் பிரசாதாவுக்கு வாய்ப்பு தரப்படவில்லை. காங்கிரஸ் பாரம்பரிய ஓட்டுகளை கைப்பற்ற வேண்டுமானால் வருணுக்கு அமைச்சர் பதவி தந்திருக்க வேண்டும். 'செல்வாக்கானவர்களை விட்டு, சாதாரண நபர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் எப்படி தேர்தலை சந்திப்பது' என முணு முணுக்கின்றனர் உ.பி., - பா.ஜ., நிர்வாகிகள். கட்சி மேலிடமோ, 'நாட்டில் 28 மாநிலங்கள் உள்ளன. அவர்களுக்கும் அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும். உ.பி., க்கு மட்டும் எல்லா பதவியையும் தர வேண்டும் என்பது நடக்கிற காரியமா...' என,
கண்டிப்புடன் கூறுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X