போன் ஒட்டு கேட்பு தேச துரோகம் : காங்.,எம்.பி. ராகுல் ஆவேசம்

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (29) | |
Advertisement
புதுடில்லி :''பெகாசஸ் மென்பொருள் வாயிலாக அரசியல் அமைப்புகள் உளவு பார்க்கப்பட்டது தேச துரோகம்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி., யுமான ராகுல் பேசியதாவது:பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதை பயங்கரவாதிகளின் மொபைல் போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்க பயன்படுத்த வேண்டும். ஆனால் பிரதமர்
போன் ஒட்டு கேட்பு, தேச துரோகம், காங்., - எம்.பி., ராகுல் ஆவேசம்

புதுடில்லி :''பெகாசஸ் மென்பொருள் வாயிலாக அரசியல் அமைப்புகள் உளவு பார்க்கப்பட்டது தேச துரோகம்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி., யுமான ராகுல் பேசியதாவது:

பெகாசஸ் மென்பொருளை ஆயுதமாக இஸ்ரேல் வகைப்படுத்தி உள்ளது. அதை பயங்கரவாதிகளின் மொபைல் போன் உரையாடல்களை ஒட்டுக்கேட்க பயன்படுத்த வேண்டும்.
ஆனால் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், இந்திய மாநிலங்கள் மற்றும் அரசு அமைப்புக்கு எதிராக அதை பயன்படுத்தி உள்ளனர்.


ரபேல் விசாரணைஅரசியல் ரீதியாகவும் அந்த மென்பொருள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் காங்., கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பயன்படுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தலைவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. என் மொபைல் போனும் ஒட்டு கேட்கப்பட்டு உள்ளது. ரபேல் தொடர்பான விசாரணையை தடுக்க பெகாசஸ் பயன்படுத்தப்பட்டு உள்ளது.


வார்த்தைகள் இல்லைஇதை தேசத்துரோகம் என்று தான் கூற வேண்டும். இதைத்தவிர வேறு வார்த்தைகள் இல்லை. போன் ஒட்டு கேட்பு விவகாரத்துக்கு பிரதமரே நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும். உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்.பெகாசஸ் மென்பொருளை யாரும் வாங்க முடியாது. இதை ராணுவமும் வாங்க முடியாது. ஒரு நாடு தான், மற்றொரு நாட்டுக்கு வழங்க முடியும். அதனால் இதை அரசுகள் இடையே நடக்கும் ஒப்பந்தமாகவே பார்க்க வேண்டும்.
யாரையும் விலைக் கொடுத்து வாங்கிவிடலாம் என பிரதமர் நினைக்கிறார். அது எப்போதும் முடியாது என்பதே உண்மை. இவ்வாறு ராகுல் கூறினார்.


புத்தி வரவில்லையே?ராகுலின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ராஜ்வர்த்தன் ரத்தோர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில் தொடர்ந்து இரண்டு முறை படுதோல்வியடைந்தும் காங்கிரசுக்கு புத்தி வரவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை வைத்து பார்லிமென்ட் கூட்டத்தொடரை முடக்க முயற்சிக்கிறது.


போன் ஒட்டு கேட்பு விவகாரத்தில் மத்திய அரசுக்கு சிறிதும் தொடர்பில்லை. தன் போன் ஒட்டுக்கேட்கப்பட்டுள்ளது என, ராகுல் நம்பினால், அதை விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்கட்டும். இந்திய தண்டனை சட்டத்துக்கு உட்பட்டு, முழுமையாக விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
24-ஜூலை-202123:05:49 IST Report Abuse
elakkumanan இந்த ஆளு தன்னுடைய போனில் வச்சிருந்த பட்டாயா படங்களை நினைத்து கதறுகிறார்...............திருடாதவன், எதுக்கு போலீசை பார்த்தவுடன், ஓடணும்...................உளவு பார்க்கும் அளவுக்கெல்லாம் இந்த வயநாடு உறுப்பினர் பெறுமானம் இல்லாத தற்குறி...............
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
24-ஜூலை-202122:15:50 IST Report Abuse
S. Narayanan திருட்டு மற்றும் தேச. துரோகம் செய்பவர்கள் போனை ஒட்டு கேட்டால் தான் அவர்கள் பயம் கொள்வர்..இவர்கள் ஏன் கோபம் கொள்ள வேண்டும்.
Rate this:
Cancel
babu - Atlanta,யூ.எஸ்.ஏ
24-ஜூலை-202121:18:08 IST Report Abuse
babu Not only you your whole family in India and Italy, all Khangress should be spied even to the bathrooms. You and youre clans are that much despicable.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X