சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (83)
Share
Advertisement
நாகர்கோவில் : ஹிந்து மதம், பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 'சீல்' வைக்கப்பட்டது.இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவு ,கடல் வழி தீவு

நாகர்கோவில் : ஹிந்து மதம், பிரதமர் மோடி, தி.மு.க., பற்றி அவதுாறாக பேசிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா தலைமறைவானார். அவர் கடல் வழியாக தீவிற்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குமரி மாவட்டம், அருமனை அருகே பனங்கரையில் கிறிஸ்துவ வழிபாட்டு தலத்துக்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 'சீல்' வைக்கப்பட்டது.

இதை கண்டித்து அருமனையில் ஜூலை 18ல் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசுகையில், 'தி.மு.க., வெற்றி நாங்கள் போட்ட பிச்சை, கிறிஸ்துவ வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. துணி உடுக்காமல் சாமி கும்பிட்டாலும் ஓட்டு கிடைக்காது' என்றதுடன், பிரதமர் மோடி, அமித் ஷா பற்றி அச்சிட முடியாத வார்த்தைகளாலும் விமர்சித்தார்.


latest tamil news



அவர் மீது தமிழகம் முழுதும் பல இடங்களில் போலீசில் புகார் செய்யப்பட்டது. அருமனை போலீசார், அவர் மீது ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், பாதிரியார் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 'நான் பேசியது எடிட் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. என் ஹிந்து சகோதர, சகோதரிகள் மனம் புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன், எதிர்காலத்தில் இப்படிப்பட்ட வார்த்தைகளை தவிர்ப்போம்' எனக் கூறப்பட்டுள்ளது.

எனினும் பாதிரியார் கைது செய்யப்படவில்லை. திடீரென அருமனையில் டி.ஐ.ஜி., பிரவின்குமார் தலைமையில் போலீசார் முகாமிட்டனர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கடல் வழியாக படகில் தப்பி விட்டதாகவும், முன்ஜாமின் கிடைத்த பின்தான் ஊர் திரும்புவார் எனவும் கூறப்பட்டது.

பாதிரியாரை உடனடியாக கைது செய்யா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்த போவதாக, ஹிந்து மகா சபா உள்ளிட்ட பல அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rupya -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202117:45:44 IST Report Abuse
rupya குதி கால் நரம்பை அறுத்து விட்டால் லொடுக்கு பாண்டி போல் ரோட்டில் அசைந்தாடி நடப்பார். திமிர் அடங்கும்.
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202117:45:44 IST Report Abuse
rupya குதி கால் நரம்பை அறுத்து விட்டால் லொடுக்கு பாண்டி போல் ரோட்டில் அசைந்தாடி நடப்பார். திமிர் அடங்கும்.
Rate this:
Cancel
rupya -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202115:30:08 IST Report Abuse
rupya இங்க அவர் தப்பிட்டார்னு சொல்றீங்க. இன்னொரு செய்தியில் மாட்டிகிட்டார்னு சொல்றீங்க. ஏது சரி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X