பொது செய்தி

இந்தியா

'ஊடகங்கள் ஒடுக்கப்படுவது கவலை அளிக்கிறது'

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (31)
Share
Advertisement
புதுடில்லி :'சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்காக, அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது' என, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பான 'கில்டு' தெரிவித்துள்ளது. அறிக்கை மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 'தைனிக் பாஸ்கர்' நாளிதழ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 'பாரத் சமாச்சார்' செய்தி தொலைக்காட்சி
ஊடகங்கள் ,ஒடுக்கப்படுவது, கவலை அளிக்கிறது'

புதுடில்லி :'சுதந்திரமாக செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை ஒடுக்குவதற்காக, அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் போக்கு கவலை அளிக்கிறது' என, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பான 'கில்டு' தெரிவித்துள்ளது.


அறிக்கை



மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, 'தைனிக் பாஸ்கர்' நாளிதழ் மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 'பாரத் சமாச்சார்' செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள், உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் வீடுகளில், வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.இந்த சம்பவம் குறித்து, இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பான 'கில்டு' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:கொரோனா இரண்டாவது அலையின் போது, மத்திய அரசு திறம்படச் செயல்படாததால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து, 'தைனிக் பாஸ்கர்' நாளிதழ் தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டது.

தன் காரணமாக அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த அரசு விளம்பரங்கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. இந்த தகவலை அந்நிறுவன தேசிய ஆசிரியர் ஓம் கவுர் சமீபத்தில் உறுதி செய்துள்ளார்.கங்கை ஆற்றில் பிணங்கள் மிதந்த சம்பவம் குறித்து, 'நியூயார்க் டைம்ஸ்' நாளிதழில் அவர் கட்டுரை எழுதினார்.உ.பி.,யைச் சேர்ந்த 'பாரத் சமாச்சார் டிவி'யிலும், கொரோனா விவகாரத்தில் அரசை கடுமையாக விமர்சித்து செய்தி வெளியானது.
இதுபோல சுதந்திரத்துடன் செயல்படும் ஊடகங்களை ஒடுக்குவதற்காக, அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அமெரிக்கா கண்டனம்



அமெரிக்காவில் செயல்படும் சி.பி.ஜே., எனப்படும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் நடவடிக்கையில் இந்தியா ஒரு போதும் ஈடுபடக் கூடாது.தைனிக் பாஸ்கர் அலுவலகங்களில் நடந்த வருமான வரிச் சோதனை அதிர்ச்சியளிக்கிறது. அரசை விமர்சித்து எழுதுவதை தடுக்கும்
செயலாகவே இதை பார்க்கிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202120:21:58 IST Report Abuse
M  Ramachandran ஊடகங்களுக்கு தற்சமயம் கடிவாளம் நிச்சயம் தேவைய் படுகிறது. நாடு நிலை என்ற பாதத்தை மறந்து சமீபகாலமாக போய் செய்திகளை கடந்த தேர்தல் காலதில் பரப்பி மக்களை குழப்பி அவர்கள் விஷவாசத்தை காட்டி விடியல் கட்சியை பதவிக்கு ஏற்றி வைத்து மகிழ்ந்த ஊடகங்களுக்கு நிச்சயம் கடி வாளாம் தேவை தான். தேர் போல் வடக்கென பொய் செய்திகளை ராகுல் ஊடகங்களை வலைத்து செய்திகளை கொடுத்ததும் நம் மக்களை போல் அவர்கள் செய்யாமல் தங்கள் பகுத்தறிவை உபயோராக படுத்தி தீயாவை களை புறம் தள்ளி விட்டனர்.
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
24-ஜூலை-202123:06:53 IST Report Abuse
Mohan தலைப்ப படித்ததும் மண்மோகன் பேசியது போல இருக்கு.
Rate this:
Cancel
Tamilan - Kongu Nadu,இந்தியா
24-ஜூலை-202121:46:40 IST Report Abuse
Tamilan பொய் பேசுவதில் எழுதுவதில் திமுகாவைவிட தமிழ் பத்திரிக்கைகள் அதிக உயரத்தில் உள்ளனர்.....பத்திரிக்கை நடத்தினால் கடத்தல், பாலியல் கொடுமை, திருட்டு, சாதி மத மோதலை உருவாக்குதல் போன்ற செயல்களை செய்ய தடை வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X