அரசியல் செய்தி

தமிழ்நாடு

வரி வருவாய் இலக்கு: முதல்வர் உத்தரவு

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : ''வணிக வரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கை முழுதும் அடைய, முனைப்புடன் செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. அதில், முதல்வர் பேசியதாவது:வணிக வரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கை முழுதும் அடைய, முனைப்புடன் செயல்பட
வரி வருவாய் ,இலக்கு, முதல்வர் உத்தரவு

சென்னை : ''வணிக வரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கை முழுதும் அடைய, முனைப்புடன் செயல்பட வேண்டும்,'' என, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.

அதில், முதல்வர் பேசியதாவது:வணிக வரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கை முழுதும் அடைய, முனைப்புடன் செயல்பட வேண்டும். நிலுவையில் உள்ள ஜி.எஸ்.டி., வரி இழப்பீடு தொகையை, மத்திய அரசிடம் இருந்து விரைந்து பெற வேண்டும்.வணிக வரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக, கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றின் வழியே பெறப்படும், வணிகர்கள் மற்றும் பொது மக்களின் புகார்கள் மீது, எவ்வித தொய்வுமின்றி, தீர்வு காணப்பட வேண்டும்.

பொது மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த, வரி வருவாய் அத்தியாவசியம்.
எனவே, வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை வசூலிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். வணிகர் நல வாரியத்தில், வணிகர்கள் உறுப்பினராகி, அதன் சேவைகளை பெற, துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது, மக்களுக்கு ஏற்ற வகையில், எளிதானதாகவும், வெளிப்படைத் தன்மையுடனும் அமைய வேண்டும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், தலைமைச் செயலர் இறையன்பு, நிதித்துறை செயலர் கிருஷ்ணன், பதிவுத் துறை தலைவர் ஜோதிநிர்மலா சாமி ஆகியோர் பங்கேற்றனர்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
24-ஜூலை-202122:08:21 IST Report Abuse
vbs manian வரி தாராளமாக போடுங்கள் வசூல் செய்யுங்கள். அப்போதுதான் இலவசங்கள் ஜொலிக்கும்.. பெட்ரோல் டீசல் விலை பயந்து இறங்கும். டாஸ்மாக் எகிறும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜூலை-202109:32:10 IST Report Abuse
duruvasar கவலையை விடுங்க தலைவரே. இலக்கை அடைய அனைத்து 34 அமைச்சர்களும் ஏற்கனவே தீயாக பணியை துவக்கிவிட்டார்கள். 3 மாத கணக்கை பார்த்தாலே புரியும்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202108:18:38 IST Report Abuse
Kasimani Baskaran பத்திரப்பதிவில் முறைகேடுகள் செய்யமுடியாத அளவுக்கு சீர்திருத்தங்களை செய்யவில்லை என்றால் வரிப்பணம் விரயமாவதை தடுக்க முடியாது. கமிசன் கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பது சார்பதிவாளர்களின் கோட்பாடு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X