அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசுக்கு எதிராக வீடுகளில் முழக்கம்: அ.தி.மு.க., அறிவிப்பு

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
சென்னை :'தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை களைய வும், மக்கள் குரலுக்கு செவி சாய்க்க செய்யவும், வரும் 28ம் தேதி, அ.தி.மு.க.,வினர் தங்கள் வீடுகளின் முன் பதாகைகள் ஏந்தி, கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்துள்ளனர்.அவர்கள் அறிக்கை:சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., தலைவர்
அரசு, வீடுகள், முழக்கம்  அ.தி.மு.க., போராட்டம் அறிவிப்பு

சென்னை :'தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை களைய வும், மக்கள் குரலுக்கு செவி சாய்க்க செய்யவும், வரும் 28ம் தேதி, அ.தி.மு.க.,வினர் தங்கள் வீடுகளின் முன் பதாகைகள் ஏந்தி, கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அவர்கள் அறிக்கை:
சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அவரது உறவினர்களும், 'தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படும்' என்று பிரசாரம் செய்தனர். 'நீட்' தேர்வை ரத்து செய்யும் சூத்திரம், தங்களுக்கு மட்டுமே தெரியும் என, சத்தியம் செய்தனர். அதை நம்பி, தமிழக வாக்காளர்கள் ஓட்டளித்தனர். சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்திருக்கும் தி.மு.க., இப்போது, 'நீட்' தேர்வுக்கு தயாராகும்படி மாணவர்களுக்கு உத்தர விட்டிருக்கிறது.

மாணவர்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், 'நீட்' தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசை, அ.தி.மு.க., கேட்டுக் கொள்கிறது. ஆட்சி அமைந்ததும், பெட்ரோல் விலையை 5 ரூபாய், டீசல் விலையை 4 ரூபாய் குறைப்பதாகவும், சமையல் காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தருவதாகவும் அளித்த வாக்குறுதி குறித்து, தி.மு.க., இதுவரை வாய் திறக்காமல் இருக்கிறது.
தி.மு.க., அளித்த வாக்குறு திகளை நிறைவேற்றுவது தான், நாணயமான செயல். மாறாக, 'அணில் ஓடுவதால் மின்சாரம் தடைபடுகிறது' என கூச்சமின்றி பேசுகிறது. தமிழகம் முழுதும், தினமும் பலமுறை மின் வெட்டு நடக்கிறது. தி.மு.க., அரசு, அ.தி.மு.க.,வினர் மீது பொய் வழக்கு போடும், மலிவான அரசியல் ஆயுதத்தை கையில் எடுத்துஇருக்கிறது.
அ.தி.மு.க.,வை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் எனக் கனவு கண்டால், அது பகல் கனவாகவே முடியும்.

எனவே, இந்த பிற்போக்குதனத்தை கை விட்டு, நேர்மையாக, திறமையாக ஆட்சி செய்ய, தி.மு.க., முன்வரட்டும்.தி.மு.க., அரசின் மெத்தனப் போக்கை களையவும், அக்கறையுடன் மக்கள் குரலுக்கு செவி சாய்க்க செய்யவும், வரும் 28ம் தேதி காலை 10:00 மணிக்கு, கட்சியினர் தங்கள் வீடுகளின் முன்னே, பதாகைகளை ஏந்தி, கவன ஈர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும். தமிழக மக்களின் உரிமை குரல்களாய் ஒழிக்க வேண்டும். கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி, கூடி குரல் எழுப்புவோம். அது, ஆளுவோரின் செவிப்பறையை சேரட்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
24-ஜூலை-202115:04:14 IST Report Abuse
raja செவிப்பறைஏ இல்லாதவனுவோல்ட நீங்கள் எழுப்பும் குரல் சேர்ந்ததா என்ன... சேராட்டி என்ன....
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
24-ஜூலை-202114:10:10 IST Report Abuse
T.sthivinayagam கொரனா ஊறுடங்கு நேரத்தில் பணம் மளிகை சாமான் கொடுத்து உதவினார்கள் .அட பேரன் பேத்தி மவளை பார்க்க பஸ்ஸில் காசு இல்லாமல் போகமுடியுது . ஆட்ச்சிக்கு வந்த கொஞ்ச நாளில்லேயை நல்லது செய்றாங்க .இதை பொறுக்க முடியாலியா உங்களுக்கு.
Rate this:
Cancel
Umar - Chennai,சவுதி அரேபியா
24-ஜூலை-202113:09:37 IST Report Abuse
Umar ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எப்போது போராடுவீர்கள்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X