'பெகாசஸ்' குற்றச்சாட்டு: விசாரிக்க குழு அமைப்பு

Updated : ஜூலை 23, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜெருசலேம்:உலகளவில் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக அரசியல் தலைவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, இஸ்ரேல் அரசு குழு அமைத்துள்ளது.மேற்காசியாவின் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. குழு அறிக்கைஇந்த மென்பொருள் வாயிலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்
'பெகாசஸ்' குற்றச்சாட்டு ,விசாரிக்க குழு அமைப்பு

ஜெருசலேம்:உலகளவில் 'பெகாசஸ்' மென்பொருள் வாயிலாக அரசியல் தலைவர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க, இஸ்ரேல் அரசு குழு அமைத்துள்ளது.மேற்காசியாவின் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்.எஸ்.ஓ., குழுமம், பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது.


குழு அறிக்கை



இந்த மென்பொருள் வாயிலாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உட்பட அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், இஸ்ரேல் பார்லிமென்ட் வெளி விவகாரங்கள் துறை தலைவர் ராம் பென் பரக் கூறியதாவது:பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரிக்க, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அடங்கிய குழுவை இஸ்ரேல் ராணுவ அமைச்சகம் அமைத்துள்ளது.


latest tamil news




இந்த குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சரி செய்யப்படும்.பயங்கரவாதம், போதை மருந்து கடத்தல், கிரிமினல் குற்றங்கள் ஆகியவற்றை தடுப்பதற்காக மட்டுமே இந்த மென்பொருளை விற்பனை செய்ய, என்.எஸ்.ஓ., குழுமத்திற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.


பரிசீலனை



இதற்கு மாறாக அரசியல் தலைவர்கள் போன்ற தனி நபர்களை உளவு பார்க்க பெகாசஸ் விற்பனை செய்யப்பட்டிருப்பது உறுதியானால், என்.எஸ்.ஓ., நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இஸ்ரேல் அரசின் இந்த முடிவை வரவேற்றுள்ள என்.எஸ்.ஓ., தலைமை செயல் அதிகாரி ஷாலவ் ஹூலியோ, ''இந்த விசாரணை வாயிலாக எங்கள் மீதான களங்கம் நீங்கும்; உண்மை வெளிச்சத்துக்கு வரும்,'' என்றார்.


பாக்., கோரிக்கை



பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக அலுவலகம், ஐ.நா.,வுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:பெகாசஸ் மென்பொருள் வாயிலாக, இந்திய அரசு சொந்த மக்களை மட்டுமின்றி, எங்கள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட வெளிநாட்டு தலைவர்களையும் உளவு பார்த்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மிகத் தீவிரமான இப்பிரச்னையை ஐ.நா., அமைப்புகள் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202100:29:15 IST Report Abuse
Kasimani Baskaran முதலில் அம்னெஸ்டியில் உள்ள மென்பொருள் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்களை விசாரிக்க வேண்டும். பல பொய்களை அள்ளி விட்டிருக்கிறார்கள். எனது சந்தேகமெல்லாம் அம்னெஸ்டியை தடை செய்த நாடுகள் மீது சேற்றை வாரியடிக்க பெகாசஸ் என்ற ஒரு உத்தியை உபயோகிக்கிறார்கள் என்பதே. சொரோசின் பண பலம் பல அரசுகளை கவிழ்க்கும் அளவுக்கு வல்லமை படைத்தது.
Rate this:
Cancel
23-ஜூலை-202123:38:40 IST Report Abuse
ராஜா மொத்தத்தில் காங்கிரஸின் இவ்வளவு பிரயத்தனமும் பாகிஸ்தானுக்கு சாதகமாக இருக்கத்தான் என்கிற உண்மை வெளிவந்திருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X