அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ., பல்கலை தேவையில்லாதது :அமைச்சர் பொன்முடி

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
விழுப்புரம் :''விழுப்புரம் ஜெ.ஜெ., பல்கலைக்கழகம் தேவையில்லாத ஒன்று,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். நாகப்பட்டினம்விழுப்புரத்தில் அவர் கூறியதாவது:ஜெ.ஜெ., பல்கலைக் கழகம் என்ற பெயரில், ஏற்கனவே நாகப்பட்டினத்தில் மீன்வள பல்கலைக் கழகம் உள்ளது.ஜெ.ஜெ., பல்கலையை எங்கும் துவங்காமல், பெயருக்கு அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய
 ஜெ., பல்கலை தேவையில்லை, அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் :''விழுப்புரம் ஜெ.ஜெ., பல்கலைக்கழகம் தேவையில்லாத ஒன்று,'' என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கூறினார். நாகப்பட்டினம்

விழுப்புரத்தில் அவர் கூறியதாவது:ஜெ.ஜெ., பல்கலைக் கழகம் என்ற பெயரில், ஏற்கனவே நாகப்பட்டினத்தில் மீன்வள பல்கலைக் கழகம் உள்ளது.ஜெ.ஜெ., பல்கலையை எங்கும் துவங்காமல், பெயருக்கு அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மிகவும் பயன் அளிக்கக்கூடிய வகையில் உள்ள அண்ணாமலை பல்கலையை ஒரு இணைப்பு பல்கலையாக மாற்றிஉள்ளோம்.
ஜெ.ஜெ., பல்கலை தேவையில்லாத ஒன்று. நுாறாண்டுகளாக உள்ள அண்ணாமலை பல்கலையுடன் இணைப்பதைத்தான் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலுார், மயிலாடுதுறை மாணவர்கள் விரும்புவர்.முன்னாள் முதல்வர், அவசரத்தில் போகிற நேரத்தில் பெயர் வைப்பதற்காக, ஜெ.ஜெ., பல்கலையை அறிவித்துள்ளார்.விழுப்புரம் கோவில் குளத்திற்கு அம்மா குளம் என பெயர் வைத்துள்ளனர்.பெயர் வைப்பது என்பது அவர்களுக்கு ஒரு 'பேஷன்!'


உயர் கல்வி வளர்ச்சி



விழுப்புரத்தில் அண்ணா பல்கலை பொறியியல் கல்லுாரி, அரசு மருத்துவக் கல்லுாரி, அரசு கலைக் கல்லுாரியில் முதுகலை பாடப்பிரிவு கொண்டு வந்தது கருணாநிதி ஆட்சியில் தான்.
இது கல்வி வளர்ச்சிக்காக எடுக்கப்படும் முடிவு. இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள கல்லுாரிகளும், அண்ணாமலை பல்கலையில் இணைக்கப்படுகின்றன.இந்த நடவடிக்கை உயர்கல்வியின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டதே தவிர, பெயருக்காக அல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
24-ஜூலை-202115:57:38 IST Report Abuse
vbs manian இப்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள பல பல் கலை கழகங்களில் எல்லா கலைகளும் பல்லிளிக்கின்றன.
Rate this:
Cancel
R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா
24-ஜூலை-202114:30:59 IST Report Abuse
R.MURALIKRISHNAN ஓ.... அறிவில்லா ஆலயத்தின் முடிவா
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
24-ஜூலை-202114:17:00 IST Report Abuse
vpurushothaman ஜெ பல்கலை தேவையில்லாதது. - சரி கருணாநிதி பல்கலை என்று வைத்து விட்டுப் போங்களேன். பரிட்சை இல்லாமலே " பாஸ் " போடுகிற இந்த நாளில் பல் கலை தான் நடைபெறுகிறது. பல்கலைக் கழக மதிப்புகள் போய் நீண்ட நாட்களாகி விட்டன. துணை வேந்தர்கள் எப்போது " ஏலம் " விடப்பட்டார்களோ அப்போதே பல்கலைக் கழகத் தரம் ' அம்போ " ஆகி விட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X