அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா?

Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
'தமிழகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை சுத்தப்படுத்த செலவழிக்கப்பட்டதா' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் கேட்ட கேள்விக்கு, மத்திய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் பதில் அளித்துள்ளார். சமூக பொறுப்புஇந்த பதிலுக்கு பின், 'தமிழகத்தில் ஓடாத கங்கை நதிக்கு, கார்ப்பரேட் நிதி எப்படி செலவழிக்க பட்டது' என,
 தமிழகத்தில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா?

'தமிழகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை சுத்தப்படுத்த செலவழிக்கப்பட்டதா' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் கேட்ட கேள்விக்கு, மத்திய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் பதில் அளித்துள்ளார்.


சமூக பொறுப்பு

இந்த பதிலுக்கு பின், 'தமிழகத்தில் ஓடாத கங்கை நதிக்கு, கார்ப்பரேட் நிதி எப்படி செலவழிக்க பட்டது' என, மத்திய அரசிடம் பதில் கேள்வி எழுப்பியுள்ளார் வில்சன்.இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக, 'கார்ப்பரேட்' தொழில் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியை, 'பி.எம்., கேர்ஸ்' நிதி கணக்கில் செலுத்த வேண்டும் என, கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், அப்போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சி.எஸ்.ஆர்., நிதியை, அந்தந்த மாநில அரசுகளிடம் கொடுக்க வேண்டும் என்றும், சிலர் குரல் எழுப்பினர். இந்நிலையில், இப்படி பெறப்பட்ட சி.எஸ்.ஆர்., நிதி எப்படி செலவிடப்பட்டது என, மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி அனுப்பினேன்.

அதற்கு, மத்திய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு என்னென்ன இனங்களின் கீழ், சி.எஸ்.ஆர்., நிதி செலவிடப்பட்டது என்பதை பட்டியலிட்டு, புள்ளி விபரங்களுடன் அவர் கூறியுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், 2017 -- 18ம் நிதியாண்டில் 1,305 நிறுவனங்கள், 627.75 கோடி ரூபாய்; 2018 -- 19ல் 1,455 நிறுவனங்கள், 829.27 கோடி ரூபாய்; 2019 -- 20ல் 1,316 நிறுவனங்கள், 919 கோடி ரூபாய், சமூக பொறுப்பு நிதியாக அளித்துள்ளன. விலங்குகள் நலன், கல்வி, சுகாதார பராமரிப்பு, குடிநீர், குடிசை பகுதி மேம்பாடு ஆகியவற்றுக்காக, கார்ப்பரேட் நிதி செலவிடப்பட்டுஉள்ளது. மேலும், தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட சி.எஸ்.ஆர்., நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை துாய்மை செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


எப்படி நம்புவது?

உ.பி., உள்ளிட்ட ஐந்து வட மாநிலங்களில் மட்டுமே பாயும் கங்கை நதி, தமிழகத்தில் பாயவில்லை. தமிழகத்தில் பாயாத கங்கையின் துாய்மைக்காக செலவிட்டதாக சொன்னால், அதை எப்படி நம்புவது?ஒன்று, கொடுக்கப்பட்ட விபரங்கள் தவறாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், பொய்யாக இருக்க வேண்டும். இதில் எது உண்மை? மத்திய அரசு தான் விளக்க வேண்டும்! இவ்வாறு வில்சன் கூறினார்.


நிறுவனங்கள் தாங்களே செலவு செய்யலாம்!

இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள நிறுவனங்கள்; 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்; ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டும் நிறுவனங்கள்; தங்களின் லாப தொகையில் இருந்து 2 சதவீதத்தை, கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதிக்கு அளிக்க வேண்டும். இந்த நிதியை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக செலவு செய்யலாம்.

இந்த நிதிக்கான திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியை, அந்த நிறுவனத்தின் குழுவே மேற்கொள்ளும். இதில் அரசின் வழிகாட்டுதல், கெடுபிடி எதுவும் இருக்காது.இப்படி இருந்த நிலையை தான், கடந்த ஆண்டு மத்திய அரசு மாற்றி, கார்ப்பரேட் பொறுப்பு நிதியை, பிரதமரின், 'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு அளிக்க உத்தரவிட்டது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PARTHIBAN N - chennai,இந்தியா
30-ஜூலை-202109:44:42 IST Report Abuse
PARTHIBAN N ஒன்றிய அரசை ஒரு கேள்வி கேட்டால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஜூலை-202117:02:29 IST Report Abuse
r.sundaram ஏன் தமிழகம் தமிழகம் என்று உங்களை சுருக்கி கொள்கிறீர்கள்? பரந்த மனப்பான்மை வேண்டும். ஏன் தமிழர்கள் காசி போவதில்லையா, கங்கையில் குளிப்பதில்லையா? உங்களுக்கு தெரியுமா, காசியில் கங்கை கரையில், அதாவது ஹநுமான் காட் பக்கத்தில் நிறைய தமிழர்கள் இருக்கிறார்கள். காரைக்குடி செட்டிநாடு சமுதாயத்தினர் விடுதியும் அங்கு உள்ளது? இன்னொரு உண்மையையும் சொல்கிறேன், அங்கு செல்பவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல, மற்ற சமுதாயத்தினரும் நிறையபேர் அங்கு போகிறார்கள். தமிழகத்தில் இருந்து கொண்டு தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டிருந்தால் வேறு ஒன்றும் தெரியாது. அந்த மாயையில் இருந்து வெளி வாருங்கள், அறிவை விசாலமாக்குங்கள். முழு இந்தியாவிலும் நடப்பதை பாருங்கள், கேளுங்கள். இந்த அளவில் கங்கையை சுத்தப்படுத்த இங்கிருந்து பணம் சென்றால் அதில் எந்த தப்பும் இல்லை. ஆனால் இங்கிருந்து நிதி வாடிகனுக்கு மட்டும் செல்லலாம் போலிருக்கிறது.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
28-ஜூலை-202104:42:29 IST Report Abuse
meenakshisundaram ஐயோ வில்சன் பரிசுத்தமான தமிழ் பெயரா ? 'சொல்லவே இல்லே "
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X