பொது செய்தி

தமிழ்நாடு

ஆறுமுகசாமி கமிஷன் பதவிக்காலம் நீட்டிப்பு

Updated : ஜூலை 25, 2021 | Added : ஜூலை 23, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை:ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக, அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், ஜெ., மரணம் குறித்து விசாரிப்பதற்காக 2017 செப்., 25ல், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் 154 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில்,கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கு நிலுவையில்
ஆறுமுகசாமி கமிஷன்  பதவிக்காலம் நீட்டிப்பு

சென்னை:ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக, அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், ஜெ., மரணம் குறித்து விசாரிப்பதற்காக 2017 செப்., 25ல், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த கமிஷன் 154 பேரிடம் விசாரணை நடத்திய நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில்,கமிஷனின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. வழக்கு நிலுவையில் உள்ளது.இதன் காரணமாக, ஜெ., மரணம் குறித்த விசாரணை நிறைவடையாமல் உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷனின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. எனவே, அவகாசத்தை நீட்டிக்கக் கோரி, அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. அதை ஏற்று, விசாரணை கமிஷனின் பதவிக் காலத்தை, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-ஜூலை-202122:52:25 IST Report Abuse
தமிழவேல் சம்பள உயர்வு உண்டா ?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
24-ஜூலை-202123:13:34 IST Report Abuse
Mohan பாவம்யா மக்கள்.மக்களின் வரி பணத்த இப்படி தின்று கொழுக்காதீர்கள்.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
24-ஜூலை-202122:09:19 IST Report Abuse
vbs manian இன்னும் எவ்வளவு மக்கள் வரிப்பணம் விரயம் ஆகவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X