தாக்குல் நடத்த வந்த‛ ட்ரோன்; ': சுட்டு வீழ்த்திய ஜம்மு போலீசார்

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஜம்மு,-ஜம்மு பகுதியின் சர்வ தேச எல்லையில் சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த 'ட்ரோன்' எனப்படும் ஆள் இல்லா குட்டி விமானத்தை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் ட்ரோன்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் விமானப்படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். சர்வதேச எல்லைஇந்நிலையில் ஜம்மு பகுதியில் உள்ள

ஜம்மு,-ஜம்மு பகுதியின் சர்வ தேச எல்லையில் சக்திவாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த 'ட்ரோன்' எனப்படும் ஆள் இல்லா குட்டி விமானத்தை போலீசார் சுட்டு வீழ்த்தினர்.



latest tamil news


ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் ட்ரோன்களை பயன்படுத்தி பயங்கரவாதிகள் சமீபத்தில் தாக்குதல் நடத்தினர். இதில் விமானப்படை வீரர்கள் இருவர் காயம் அடைந்தனர். சர்வதேச எல்லைஇந்நிலையில் ஜம்மு பகுதியில் உள்ள சம்பா சர்வதேச எல்லையில் சக்தி வாய்ந்த வெடிபொருட்களுடன் வந்த ட்ரோனை, போலீசார் நேற்று அதிகாலை சுட்டு வீழ்த்தினர்.இது குறித்து போலீசார் கூறியதாவது: சம்பாவின் கன்சுக்கில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் ட்ரோன் ஒன்று சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் சுற்றி வருவதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அந்த பகுதிக்கு சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்றனர்.

இந்திய பகுதிக்குள் 8 கி.மீ., துாரம் பறந்து வந்த ட்ரோன், தாக்குதல் நடத்துவதற்காக கீழே இறங்கிய போது அதை போலீசார் சுட்டு வீழ்த்தினர். வெடி பொருட்கள்அந்த ட்ரோனில் 5 கிலோ எடை உடைய வெடிபொருட்கள் இணைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பெரும் சதித்திட்டம் முறியடிக்கப் பட்டது. அந்த விமானத்தில் இருந்த வெடிபொருட்களைக் கைப்பற்றி, அவை எங்கு தயாரிக்கப்பட்டவை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


latest tamil news




2 பயங்கரவாதிகள் கொலை

ஜம்மு - காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் சோப்பூர் பகுதியில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு தகவல் கிடைத்தது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் நடந்த சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர்பெயர் பயாஸ் என்பதும், இவருக்கு பலபயங்கரவாத தாக்குதல்களில் தொடர்பு உள்ளதும், விசாரணையில் தெரிந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gahej -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202109:35:34 IST Report Abuse
gahej what ver media says we have to o trust, I hope there is nothing more than 1 authentic information.
Rate this:
Cancel
Uma Shankar - Kuala Lumpur,மலேஷியா
24-ஜூலை-202106:30:43 IST Report Abuse
Uma Shankar சுட்டு வீழ்த்தப்பட்ட 'ட்ரோன்' சேதம் இல்லாமல் போட்டோவிற்ற்கு எப்படி போஸ் கொடுக்குது டவுட்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X