பொது செய்தி

தமிழ்நாடு

கனமழை காரணமாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
சென்னை--வடமாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தென்மாநிலங்களில் இருந்து செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.பீஹார், அசாம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.ரயில் நிலையங்கள், தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னை--வடமாநிலங்களில் தொடரும் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக தென்மாநிலங்களில் இருந்து செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.



latest tamil news


பீஹார், அசாம், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில், ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்களில் வெள்ளமும், நிலச்சரிவும் ஏற்பட்டு உள்ளது.


latest tamil news


ரயில் நிலையங்கள், தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், வட மாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; பல ரயில்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுகின்றன.இந்நிலையில், கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் நேரம் மற்றும் வழித்தட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X