பொது செய்தி

தமிழ்நாடு

5 ஆண்டில் அரசுக்கு ரூ.876 கோடி வீண்! சாலை பாதுகாப்பு பணிகளில் முறைகேடு

Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை :நெடுஞ்சாலைத் துறை வாயிலாக சாலை பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தியதில், ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு 876 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில், 61 ஆயிரத்து 305 கி.மீ., சாலைகள் உள்ளன. இவை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என,
5 ஆண்டு, அரசு,.876 கோடி வீண்  சாலை பாதுகாப்பு பணி முறைகேடு

சென்னை :நெடுஞ்சாலைத் துறை வாயிலாக சாலை பாதுகாப்பு சாதனங்கள் பொருத்தியதில், ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு 876 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில், 61 ஆயிரத்து 305 கி.மீ., சாலைகள் உள்ளன. இவை, மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட இதர சாலைகள் என, பிரிக்கப்பட்டுள்ளன.


தாக்குப்பிடிப்பதில்லைஅபாய வளைவு, பலமுனை சந்திப்பு, வழிகாட்டி பலகை இல்லாதது, வாகனங்களின் வேகம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், சாலைகளில் தினமும் விபத்துகள் ஏற்படுகின்றன. இதனால் உயிரிழப்புகளும், உடல் ஊனமுற்றோர் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பல்வேறு பணிகளை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மட்டுமின்றி, அந்தந்த மாநில நெடுஞ்சாலை துறையும் செய்து வருகிறது. இதற்காக, சாலைகளில் வழிகாட்டி பலகைகள் பொருத்துதல், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், இரவில் ஒளிரும் சோலார் சாதனங்கள் பொருத்துதல், நடைபாதை கோடுகள் வரைதல், வேகத்தடை அமைத்தல் உட்பட பல்வேறு சாலை பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விபத்து பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் இப்பணிகள், மாநில அரசு நிதியில் மட்டுமின்றி, உலக வங்கி கடனுதவி பெற்றும் மேற்கொள்ளப்படுகின்றன.கடந்த 2015 முதல், 2020 வரை இப்பணிகளுக்கு, மொத்தமாக 1,752 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டு உள்ளது.அதிகபட்சமாக 2014 - 15ல், 450 கோடி ரூபாய்; மற்ற ஆண்டுகளில், தலா 300 கோடி ரூபாய் செலவிலும் இப்பணிகள் நடந்துள்ளன.இவ்வாறு அமைக்கப்பட்ட இரவில் ஒளிரும் சாதனங்கள், ரப்பர் கோடுகள் போன்றவை, சாலைகளில் சில மாதங்கள் கூட தாக்குப்பிடிப்பதில்லை. திட்ட மதிப்பில் கூறியபடி, பல இடங்களில் சாலை வழிகாட்டி பலகைகள் நிறுவப்படவில்லை.


குறுகிய காலம்latest tamil newsகாற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல், தரமற்ற வழிகாட்டி பலகைகள் குறுகிய காலத்தில் சேதமடைந்து விடுகின்றன. தரம் குறைந்த சாலையோர தகடு தடுப்புகளும், வாகனங்கள் மோதி விரைவில் சேதமாகி விடுகின்றன.இதுபோன்ற சாலை பாதுகாப்பு சாதனங்கள், புதுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திடம் இருந்து அதிகம் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. ஒப்பந்தப்புள்ளி கோரும்போது, போட்டி ஏற்படாத வகையில் அதிகாரிகள் பார்த்து கொண்டுள்ளனர்.


ஒரே நிறுவனம்இதன் வாயிலாக, சாலை பாதுகாப்பு சாதனங்கள் விலை 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் அரசுக்கு 876 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:சாலை பாதுகாப்பு சாதனங்கள் ஒரே நிறுவனத்திடம் இருந்தே அதிகம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. விலையும் 50 சதவீதம் வரை கூடுதலாக உள்ளது.

இந்த வகையில், ஐந்து ஆண்டுகளில் 876 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தொகை பல தரப்பிலும் பங்கு போடப்பட்டுள்ளது. தரமற்ற பொருட்கள், சரியாக பணிகள் இல்லாததால், விபத்துகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரும் காலங்களில் சாலை பாதுகாப்பு பணிக்கு முக்கியத்துவம் அளித்து, அதற்கான பணிகளை தரமாக மேற்கொள்ள, முதல்வர் ஸ்டாலின், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.பல கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கப்படும் பொருட்களின் இருப்பு, பயன்பாடு குறித்து, எந்த கணக்கும் இல்லை.

இந்த கணக்குகளை முறையாக பராமரிக்க வேண்டும்.ஒவ்வோர் ஆண்டும் வீணாகும் இரும்பு தகடு உள்ளிட்ட சாலை பாதுகாப்பு சாதனங்களை, ஏலத்தில் விற்க வேண்டும். இதன் வாயிலாக, நெடுஞ்சாலைத் துறையின் நிதி இழப்பை குறைக்க முடியும்.நிதியை செலவிட வேண்டும் என்பதற்காக, ஒரே சாலைக்கு பலமுறை பெயர் பலகை தயாரித்து வீணடிப்பதற்கும், புதிய அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
24-ஜூலை-202110:58:10 IST Report Abuse
Apposthalan samlin அதான் 66 ஆயிரம் கோடி கடன் இருந்த நிலையில் எப்படி ஐந்து அரை லட்சம் கோடி போனது என்று பார்த்தல் இந்த மாதிரி கோல் மால்களில் தான் பணம் போய் உள்ளது திரும்ப கருவூலத்தில் சேர்க்க வேண்டும் குன்கா மாதிரி நீதி பதிகள் அரசுக்கு உதவ வேண்டும் வாய்தா போட்டு கொள்ளக்கூடாது .
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
24-ஜூலை-202109:46:25 IST Report Abuse
Vivekanandan Mahalingam நாற்பது % கமிஷனின் விளைவு
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
24-ஜூலை-202109:15:04 IST Report Abuse
duruvasar இல்லாத சாலையில் இதுக்கு மேல் எப்படிங்க பராமரிப்பு செய்யமுடியும். கவலையை விடுங்க. விடியல் அரசு செப்பனிட்டு தேனும், பாலும் ஓடும் நாள் மிக அருகில் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X