பொது செய்தி

இந்தியா

தமிழகத்தில் பாயாத கங்கையை சுத்தப்படுத்த நிதி ஒதுக்கீடா?

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (39)
Share
Advertisement
தமிழகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை சுத்தப்படுத்த செலவழிக்கப்பட்டதா' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் கேட்ட கேள்விக்கு, மத்திய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் பதில் அளித்துள்ளார்.இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக, 'கார்ப்பரேட்' தொழில் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக

தமிழகத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை சுத்தப்படுத்த செலவழிக்கப்பட்டதா' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வில்சன் கேட்ட கேள்விக்கு, மத்திய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் இந்தர்ஜித் சிங் பதில் அளித்துள்ளார்.



latest tamil news



இது குறித்து, அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக, 'கார்ப்பரேட்' தொழில் நிறுவனங்கள், சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக பொறுப்பு நிதியை, 'பி.எம்., கேர்ஸ்' நிதி கணக்கில் செலுத்த வேண்டும் என, கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. கார்ப்பரேட் நிறுவனங்கள், அப்போதே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. சி.எஸ்.ஆர்., நிதியை, அந்தந்த மாநில அரசுகளிடம் கொடுக்க வேண்டும் என்றும், சிலர் குரல் எழுப்பினர்.

இந்நிலையில், இப்படி பெறப்பட்ட சி.எஸ்.ஆர்., நிதி எப்படி செலவிடப்பட்டது என, மத்திய அரசுக்கு எழுத்துப்பூர்வமாக கேள்வி அனுப்பினேன். அதற்கு, மத்திய கார்ப்பரேட் விவகார துறை இணை அமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு என்னென்ன இனங்களின் கீழ், சி.எஸ்.ஆர்., நிதி செலவிடப்பட்டது என்பதை பட்டியலிட்டு, புள்ளி விபரங்களுடன் அவர் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:தமிழகத்தில், 2017 -- 18ம் நிதியாண்டில் 1,305 நிறுவனங்கள், 627.75 கோடி ரூபாய்; 2018 -- 19ல் 1,455 நிறுவனங்கள், 829.27 கோடி ரூபாய்; 2019 -- 20ல் 1,316 நிறுவனங்கள், 919 கோடி ரூபாய், சமூக பொறுப்பு நிதியாக அளித்துள்ளன. விலங்குகள் நலன், கல்வி, சுகாதார பராமரிப்பு, குடிநீர், குடிசை பகுதி மேம்பாடு ஆகியவற்றுக்காக, கார்ப்பரேட் நிதி செலவிடப்பட்டுஉள்ளது.

மேலும், தமிழகத்தில் இருந்து பெறப்பட்ட சி.எஸ்.ஆர்., நிதியில் ஒரு பகுதி, கங்கை நதியை துாய்மை செய்வதற்காக செலவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். எப்படி நம்புவது?உ.பி., உள்ளிட்ட ஐந்து வட மாநிலங்களில் மட்டுமே பாயும் கங்கை நதி, தமிழகத்தில் பாயவில்லை. தமிழகத்தில் பாயாத கங்கையின் துாய்மைக்காக செலவிட்டதாக சொன்னால், அதை எப்படி நம்புவது?ஒன்று, கொடுக்கப்பட்ட விபரங்கள் தவறாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், பொய்யாக இருக்க வேண்டும். இதில் எது உண்மை? மத்திய அரசு தான் விளக்க வேண்டும்! இவ்வாறு வில்சன் கூறினார். நிறுவனங்கள் தாங்களே செலவு செய்யலாம்!


latest tamil news



இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் சட்டத்தின்படி, 500 கோடி ரூபாய் நிகர மதிப்புள்ள நிறுவனங்கள்; 1,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள்; ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டும் நிறுவனங்கள்; தங்களின் லாப தொகையில் இருந்து 2 சதவீதத்தை, கார்ப்பரேட் சமூக பொறுப்பு நிதிக்கு அளிக்க வேண்டும். இந்த நிதியை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களின் அறக்கட்டளை வாயிலாக செலவு செய்யலாம். இந்த நிதிக்கான திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணிப்பு பணியை, அந்த நிறுவனத்தின் குழுவே மேற்கொள்ளும். இதில் அரசின் வழிகாட்டுதல், கெடுபிடி எதுவும் இருக்காது.இப்படி இருந்த நிலையை தான், கடந்த ஆண்டு மத்திய அரசு மாற்றி, கார்ப்பரேட் பொறுப்பு நிதியை, பிரதமரின், 'பி.எம்., கேர்ஸ்' நிதிக்கு அளிக்க உத்தரவிட்டது.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-ஜூலை-202104:34:03 IST Report Abuse
meenakshisundaram வில்சன் அவர்கள் வீராணம் பைப் ஊழல் நடந்த பொது எங்கே போனார் , திமுகவில் அன்று உதவானிதி பிறந்து கூட இருக்க மாட்டார்
Rate this:
Cancel
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் திருச்சி BHEL லின் CSR மூலம் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை வளைவில்லாமல் நேராக்கி அப்டியே நேரடியாக திருச்சி கோட்டை ரயில் நிலையத்துக்கு செல்லும்படி பாதை அமைக்க சொல்லுங்களேன்
Rate this:
Cancel
24-ஜூலை-202120:52:19 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 Please don't repeat the same comments
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X