'அம்னெஸ்டி' அடிக்கும் தொடர் 'பல்டி'

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ.,
அம்னெஸ்டி' அடிக்கும் தொடர் பல்டி

இந்திய அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், இதர பிரபலங்களின் போன்களை ஒட்டு கேட்க, 'பெகாசஸ்' மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக, குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதன் உண்மை தன்மை பற்றி கேள்வி எழுந்தவுடன், இத்திட்டத்தோடு தொடர்புடைய, 'அம்னெஸ்டி இன்டர்நேஷனல்' அமைப்பு, தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாக, அறிக்கைகள் வெளியிட்டு வருகிறது.

இஸ்ரேல் நாட்டை சேர்ந்த என்.எஸ்.ஓ., நிறுவனத்தின் வேவு மென்பொருளே, பெகாசஸ். என்.எஸ்.ஓ., இந்த மென்பொருளை, அரசுகளுக்கு மட்டுமே விற்பனை செய்யும் என்ற நிலையில், அந்த மென்பொருளைப் பயன்படுத்தி, பல நாடுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேரின், மொபைல் போன்கள் ஒட்டு கேட்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

இந்தியாவில் 300 போன்கள் எண்களும், இதில் இடம்பெற்றுஉள்ளன, அதில் 40 பத்திரிகையாளர்களின் போன்களும் அடக்கம். ஆனால், அடிப்படையில் பல கேள்விகள் எழுகின்றன. எங்கிருந்து இந்த 50 ஆயிரம் எண்கள் வெளியே வந்தன; யார் வெளியிட்டது; அதன் உண்மை தன்மை என்ன? முக்கியமாக, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 17 ஊடக நிறுவனங்கள், இந்த ஒட்டு கேட்பு விவகாரத்தை வெளிக்கொண்டு வந்துள்ளன.


அடிப்படையே இல்லை



latest tamil news




இவர்களுக்கு, இந்தத் தகவல்களை கொடுத்தது, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, 'பார்பிடன் ஸ்டோரீஸ்' என்ற வலைதளமும், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பும் தான். அமென்ஸ்டி இன்டர் நேஷனல், தன் பாதுகாப்பு ஆய்வகத்தில், 67 போன்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், 37 போன்கள் பெகாசஸ் மென்பொருளால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.பல நாடுகளின், முக்கிய தலைவர்களின் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாக தகவல் வெளியானவுடன், ஒவ்வொரு நாடும் என்.எஸ்.ஓ., நிறுவனம் மீதான விசாரணையை துவங்கி விட்டன.இந்நிலையில் தான், அம்னெஸ்டி இன்டர்நேஷனல், இஸ்ரேல் நாட்டில் 'ஹீப்ரு' மொழியில், அந்நாட்டு பத்திரிகைகளுக்கு ஒரு செய்தியை வெளியிட்டது. அது கூறியிருக்கும் முக்கிய செய்தி இது தான்:'இது என்.எஸ்.ஓ.,வின் பெகாசஸ் வேவு பார்க்கப்படுவோர் பட்டியல்' என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிடவில்லை. ஆனால், பல உலக நாடுகளைச் சேர்ந்த ஊடகங்கள் அப்படி தெரிவித்தன.

இது, என்.எஸ்.ஓ., வாடிக்கையாளர்களுக்கு, அதாவது பல நாடுகளுக்கு முக்கியமான எண்களாக இருக்கக்கூடிய பட்டியல் என்று தான், அம்னெஸ்டியும், புலனாய்வு பத்திரிகையாளர்களும், அவர்கள் பணியாற்றும் ஊடகங்களும், மிகத் தெளிவான மொழியில் தெளிவுபடுத்தியுள்ளன.இந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள், ஆர்வம் காட்டக்கூடியவர்களின் உத்தேசப் பட்டியலாக இது இருக்கலாம். அவர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் எதிரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் இதரரை வேவு பார்ப்பதில் முன்னர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அதாவது, 17 சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட போன் எண்கள் என்பவை, பல்வேறு நாடுகள் ஆர்வம் காட்டக்கூடியவர்களின், உத்தேச பட்டியல் தான்.இவ்வாறு தெரிவித்து, அம்னெஸ்டி இன்டர்நேஷனல், 'பல்டி' அடித்தது.இதனால், பல்வேறு நாடுகளில் நடைபெறும் கருத்து மோதல்களில், ஒரு அர்த்தமும் இல்லை. அதற்கு அடிப்படையே இல்லை என்பது
தெளிவாகியுள்ளது.


சந்தேகம்



இந்த ஹீப்ரு மொழி பத்திரிகை செய்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, சர்வதேச ஊடகங்களில் வெளியானவுடன், மீண்டும் ஒருமுறை, 'பல்டி' அடித்துள்ளது, அம்னெஸ்டி இன்டர்நேஷனல்.'பழைய குருடி கதவைத் திறடி' என்பது போல், மீண்டும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள, 'டுவிட்டர்' செய்தியில், பெகாசஸ் திட்டத்தின் கண்டுபிடிப்புகளை, தாங்கள் முழுமையாக ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது.இப்படிப்பட்ட முரண்பட்ட செய்திகளாலும், நிலைப்பாடுகளும், அம்னெஸ்டி இன்டர்நேஷனலின் நேர்மை சந்தேகத்துக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர், பல்வேறு சமூக ஆர்வலர்கள்.-- நமது நிருபர் - -

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
24-ஜூலை-202112:37:12 IST Report Abuse
sridhar அம்னெஸ்டி ஒரு வெறி பிடித்த நேர்மைஅற்ற இயக்கம் , நம்ப நுங்கம்பாக்கம் கல்லூரி போல .
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-ஜூலை-202111:08:11 IST Report Abuse
Sridhar முதலில் பேகசுஸ் லிஸ்ட் என்றார்கள். NSO நிறுவனம் கேஸ் போடுவேன் என்றதும், இல்லை இல்லை அவர்களுடைய வாடிக்கையாளர்கள் நாடுகள் செய்த லிஸ்ட் என்றார்கள். அவ்வளவு நாடுகளிடமிருந்து இந்த லிஸ்டை யார் பெற்றார்கள், யார் அதையெல்லாம் இணைத்து ஒன்றாக லீக் செய்தார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. இது எதோ ரபேல் போன்ற அரைகுறை வேலை போல தெரிகிறது. ஒருவேளை சாம் பிட்ரோடா செய்த வேலையாக இருக்குமோ? தேசவிரோதிகளின் போன்களை ஒட்டு கேட்பதில் தவறே இல்லை என்பது வேறு விஷயம். உண்மை என்னவென்றால், இந்த அரசு செய்ய மாட்டேங்குது. எதிர்க்கட்சியில் பலபேரோட உண்மை முகங்கள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருக்கும். தேசநலனோடு நமக்கும் நாலு சினிமா பார்த்த உணர்வு வரும்.
Rate this:
Cancel
Raja - Coimbatore,இந்தியா
24-ஜூலை-202111:07:28 IST Report Abuse
Raja இந்த விஷயத்தில் ஆம் இல்லை என்று பதில் சொல்ல வேண்டிய அரசே மௌனம் காக்கும் போது அவர்களை காப்பாற்ற சிலர் செய்யும் பகீரத முயற்சி வியப்பளிக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X