பொது செய்தி

தமிழ்நாடு

'சீஸ்மோகிராப்' கருவி பொருத்த பெரியாறு அணையில் ஆய்வு

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
தேக்கடி:பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை துல்லியமாக அறியும் வகையில் 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.இங்கு 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்த 2020 ஜூன் 30ல் தமிழக அரசு ரூ.99.95 லட்சம் ஒதுக்கியது. ரூ.50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் கருவி பொருத்தும் இடத்தை தேர்வு செய்ய தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்

தேக்கடி:பெரியாறு அணையில் நிலநடுக்கத்தை துல்லியமாக அறியும் வகையில் 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்துவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இங்கு 'சீஸ்மோகிராப்' கருவி பொருத்த 2020 ஜூன் 30ல் தமிழக அரசு ரூ.99.95 லட்சம் ஒதுக்கியது. ரூ.50 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. அணைப்பகுதியில் கருவி பொருத்தும் இடத்தை தேர்வு செய்ய தேசிய புவியியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஆர்.விஜயராகவன், எம்.சேகர் ஆய்வு மேற்கொண்டனர்.

பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவி பொறியாளர்கள் ராஜகோபால், குமார் உடனிருந்தனர்.இடுக்கி மாவட்டத்தில் வல்லக்கடவு, இடுக்கி அணை, சிறுதோணி, குளமாவு, ஆலடி, சோத்துப்பாறை ஆகிய 6 இடங்களில் கேரள அரசால் ஏற்கனவே இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


நீர்வரத்து அதிகரிப்பு



அணை நீர்ப்பிடிப்பில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தேக்கடியில் 47 மி.மீ., பெரியாறில் 85.80 மி.மீ., மழை பெய்தது. அணைக்கான நீர்வரத்து 1315 கனஅடியில் இருந்து 4294 கனஅடியாக அதிகரித்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக 900 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 130.25 அடியில் இருந்து 131.50 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உயர்ந்தது.

நீர் இருப்பு 5048 மில்லியன் கனஅடியாகும்.நேற்று பகல் முழுவதும் நீர்ப்பிடிப்பில் மழை தொடர்ந்தது. அணை நீர் மூலம் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 81 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X