17 பேர் நினைவு தினம்அரசியல் கட்சிகள் பங்கேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

17 பேர் நினைவு தினம்அரசியல் கட்சிகள் பங்கேற்பு

Added : ஜூலை 24, 2021
Share
திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணியில் 17 பேர் இறந்ததன் நினைவுதினத்தில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி 1999 ஜூலை 23ல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தலைமையில் ஊர்வலம் நடந்தது.மா.கம்யூ.,உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது நடந்த போலீஸ்

திருநெல்வேலி:நெல்லையில் தாமிரபரணியில் 17 பேர் இறந்ததன் நினைவுதினத்தில் பல்வேறு கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்.

திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கோரி 1999 ஜூலை 23ல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தலைமையில் ஊர்வலம் நடந்தது.மா.கம்யூ.,உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் பங்கேற்றனர். கலெக்டர் அலுவலகம் அருகே ஊர்வலம் வந்தபோது நடந்த போலீஸ் தடியடியில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் பலியாயினர்.அதன் 22வது ஆண்டு நினைவு தினம் நேற்று நடந்தது. காங்.,தலைவர் செல்வபெருந்தகை, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி உள்பட தி.மு.க., அ.தி.மு.க., தவிர 30க்கும் மேற்பட்ட அமைப்பினர் நினைவஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X