பொது செய்தி

தமிழ்நாடு

தலைமையாசிரியர் எஸ்.ஆர்.,களை சி.இ.ஓ.,க்கள் பராமரிக்க அதிகாரம்: கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
மதுரை:'அரசு மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர் பணிப்பதிவேடுகளை (எஸ்.ஆர்.,) மீண்டும் சி.இ.ஓ.,க்கள் பராமரிக்கஅதிகாரம் வழங்க வேண்டும்' என கல்வி அமைச்சர் மகேஷிடம் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தியது.சங்க மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமையில் நிர்வாகிகள் கந்தசாமி, கார்மேகம், சின்னதுரை, கிறிஸ்டோபர் ஜெயசீலன், திருஞானம், சின்னபாண்டி சார்பில்

மதுரை:'அரசு மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர் பணிப்பதிவேடுகளை (எஸ்.ஆர்.,) மீண்டும் சி.இ.ஓ.,க்கள் பராமரிக்கஅதிகாரம் வழங்க வேண்டும்' என கல்வி அமைச்சர் மகேஷிடம் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழகம் வலியுறுத்தியது.

சங்க மாநில சட்ட செயலாளர் அனந்தராமன் தலைமையில் நிர்வாகிகள் கந்தசாமி, கார்மேகம், சின்னதுரை, கிறிஸ்டோபர் ஜெயசீலன், திருஞானம், சின்னபாண்டி சார்பில் அமைச்சரிடம் ரூ.2 லட்சம் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது.

அப்போது அவர்கள் அளித்த மனு: தற்போது உயர்நிலை தலைமையாசிரியர் அந்தஸ்தில் உள்ள டி.இ.ஓ.,க்கள் மேல்நிலை தலைமையாசிரியர்பணிப் பதிவேடுகளை பராமரிக்கின்றனர். இதைமீண்டும் சி.இ.ஓ.,க்கள் பராமரிக்க உத்தரவிட வேண்டும். பள்ளிகளில் இருப்பு வைக்கப்பட்ட கணினிகள் திருடு போனாதால் தலைமையாசிரியர்களின் பணப் பலன்கள் நிறுத்தி வைக்கப்படுவதை வாபஸ் பெறவேண்டும்.

மாணவருக்கான 14 நலத்திட்டங்களை வழங்கதனி அலுவலர் நியமிக்க வேண்டும். பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களைநிரப்ப வேண்டும். ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் நிதி மூலம் பள்ளிக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்ய தலைமையாசிரியருக்கு அதிகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X