அரசியல் செய்தி

தமிழ்நாடு

மதுரை மாநகராட்சி விவகாரம் அரசுக்கு பா.ஜ., கண்டனம்.

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை-'உயர் பாதுகாப்பு உடைய தலைவர் வருகைக்காக, மதுரை துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணி குறித்து கடிதம் எழுதியதற்காக, அவரை அரசு பணியிலிருந்து விடுவிப்பு செய்தது கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், அகில இந்திய தலைவர் மோகன் பாகவத், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து,

சென்னை-'உயர் பாதுகாப்பு உடைய தலைவர் வருகைக்காக, மதுரை துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணி குறித்து கடிதம் எழுதியதற்காக, அவரை அரசு பணியிலிருந்து விடுவிப்பு செய்தது கண்டிக்கத்தக்கது' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



latest tamil news



அவரது அறிக்கை:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின், அகில இந்திய தலைவர் மோகன் பாகவத், நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, நிர்வாகிகளையும், மக்களையும் சந்திப்பது வழக்கம். அவருக்கு, 'இசட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.அரசியலுக்கு அப்பாற்பட்டு, தேசத்தின் வளர்ச்சிக்கும், இந்திய மக்களின் உயர்வுக்கும் சேவையாற்றுகிற அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., விளங்குகிறது. மோகன் பாகவத், மதுரை, கன்னியாகுமரியில், 22ம் தேதி முதல், 26ம் தேதி வரை, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.அதி உயர் பாதுகாப்பு உடைய தலைவர் வருகையின் போது, வழக்கமாக என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ, அதை பின்பற்றி, மதுரை மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.

இதற்கென, மதுரை துணை ஆணையர் சண்முகம், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பராமரிப்பு பணிகள் குறித்து, ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதற்காக தமிழக அரசு, அவரை பணி விடுவிப்பு செய்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது; கண்டிக்கத்தக்கது.தி.மு.க.,வின் சாமானிய தலைவர்கள் சென்றாலே, மாநகராட்சி அதிகாரிகளே நேரில் சென்று, சாலை சீரமைப்பு, பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தாங்கள் விரும்பாத அமைப்பின், மிக முக்கிய தலைவர் வருகைக்கான ஏற்பாடுகளை, வழக்கம் போல் செய்த அதிகாரிக்கு, அரசு தண்டனை கொடுப்பது நியாயமா? இத்தகைய நடவடிக்கை, தவறான முன்உதாரணம் ஆகிவிடும்.தமிழக அரசு, நேர்மையாக, பாரபட்சமின்றி நடந்து கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றால், மாநகராட்சி துணை ஆணையர் சண்முகம் பணி விடுவிப்பு ரத்து செய்யப்பட வேண்டும். இல்லையெனில், ஒருதலைபட்சமான செயலையும், அதிகாரிகளை பழிவாங்கும் செயலையும், மக்கள் மன்றத்திற்கு எடுத்து செல்வோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது


latest tamil news



.'மாற்றத்தில் நிர்ப்பந்தம் இல்லை'

மாநகராட்சி ஆணையர் கே.பி.கார்த்திகேயன் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ்., தலைவர் உயர் பாதுகாப்பு பெற்றவர். அவரை போன்ற உயர் பாதுகாப்புடன் கூடிய, வி.ஐ.பி.,க்கள் மாநகருக்கு வரும் போது, போலீஸ் அறிவுறுத்தலில், இதுபோன்ற உத்தரவு பிறப்பிப்பது இயல்பான நடைமுறை தான். அந்த அடிப்படையில் தான், குறிப்பிட்ட அந்த தலைவர், மாநகரில் செல்லும் பகுதிகளை சுத்தமாக வைத்து கொள்வது குறித்து, மாநகராட்சி ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பிட்ட அந்த தலைவர் செல்லும் பகுதிகளில், போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இப்படிப்பட்ட சிறப்பு பணி செய்வது வழக்கமான நடைமுறை தான். மற்றபடி, உதவி கமிஷனர் சண்முகம், அவர் வகித்து வந்த பதவியில் இருந்து விடுவித்திருப்பது, நிர்வாக காரணத்துக்காக தான். இதில், வேறு எந்த நிர்ப்பந்தமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.-

'அரசு செயல்பாட்டில் சந்தேகம் எழுகிறது'-

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., கலை பிரிவு செயலர் கவிஞர் மோகன்தாஸ் கூறியதாவது:ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், தேச விரோத தலைவர் அல்ல. அவர் நீண்ட காலமாக அரசியல் சார்பு இயக்கம் ஒன்றில், மிக பெரிய தலைவராக இருப்பவர். 'இசட் பிளஸ்' பாதுகாப்பில் இருப்பவர். அவர், போகும், வரும் இடங்களில் சாலையை சீரமைத்து, சுகாதாரமாக வைத்து கொள்ள சொல்வதில், எந்த தவறும் இல்லை. அதை செய்தவரை பாராட்டாமல், அவரை பணியில் இருந்து விடுவிப்பது தவறு. இப்படி தான், ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியின் போது, ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த அனுமதி கொடுத்தனர். உடனே, சிலர் கொந்தளித்தனர். நாட்டில் தேச விரோதிகள், சுதந்திரமாக எதை வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், மதிக்கக்கூடிய ஒரு தலைவருக்கு, இயக்கத்துக்கு ஆதரவாக எதுவும் செய்தால், அதை எதிர்க்க, ஒரு பெரும் கோஷ்டி இருக்கிறது. அவர்கள் சொல்வதை கேட்டு அரசு நடந்து கொள்வது, அரசின் செயல்பாட்டையே சந்தேகிக்க வைக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
24-ஜூலை-202113:35:40 IST Report Abuse
Dhurvesh சபாஷ். சரியாத்தான் செய்துள்ளார்கள். மத வாத, உயர்சாதி பிரிவினை பேசும் இயக்கமான RSS'ன் தலைவர் வருகைக்கு ஸ்பெஷல் வரவேற்பு கொடுக்கவா, தமிழர்கள் ஸ்டாலின் அவர்களை தேர்ந்தெடுத்து உள்ளனர்.?. அவருக்கு கருப்பு கொடி காட்டாமல் இருந்ததே பெரிது. அண்ணாமலை சொந்த மாநிலத்திற்கு சென்று உளற முடியுமா?
Rate this:
Cancel
24-ஜூலை-202113:34:07 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் முதலில் நீர் இதை மக்கள் மன்றத்துக்கு எடுத்துச் சென்று பாருங்கள் இல்லை நீர் உங்கள் ஒரு கருது கணிப்பு ONLINE இல் செய்து பாருங்களேன் அத்தனைக்கும் உங்க"""உலகின் பெரிய சேவை அமைப்புகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் சொல்லிவிட்டு செய்து பாருங்கள் அப்போ தெரியும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202111:01:48 IST Report Abuse
Lion Drsekar எந்த குரலும் எங்கும் ஈடுபடப்போவதும் இல்லை, எதுவுமே நடக்கபோவதும் இல்லை, வேடிக்கை மட்டுமே பார்க்கமுடியும், இதுதான் முடியாட்சியின் தத்துவம், இங்குதான் ஆன்மிகம் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுவிட்டதே ஆகவே பாரதம், இந்தியா மற்றும் பற்றி பேச முடியாத நிலையை கடந்து விட்டதே, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X