'ஏர்டெல்' நிறுவன மனு; உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-வருவாய் கணக்கீட்டு தவறை சரி செய்ய உத்தரவிடக் கோரி, தொலைதொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.'பார்தி ஏர்டெல், வோடபோன், டாடா டெலிசர்வீஸ்' உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள், சீரமைக்கப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் தொலைதொடர்பு துறைக்கு 93 ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தன. . இது தொடர்பான வழக்கில்

புதுடில்லி-வருவாய் கணக்கீட்டு தவறை சரி செய்ய உத்தரவிடக் கோரி, தொலைதொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.'



latest tamil news



பார்தி ஏர்டெல், வோடபோன், டாடா டெலிசர்வீஸ்' உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள், சீரமைக்கப்பட்ட மொத்த வருவாய் அடிப்படையில் தொலைதொடர்பு துறைக்கு 93 ஆயிரத்து 520 கோடி ரூபாய் நிலுவை வைத்திருந்தன. . இது தொடர்பான வழக்கில் நிலுவையில் 10 சதவீதத்தை 2021 மார்ச்சுக்குள் செலுத்தவும், எஞ்சிய தொகையை 2031ம் ஆண்டு வரை தவணையில் செலுத்தலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன்படி இந்த நிறுவனங்கள் முதல் தவணையை செலுத்தின. அதன் பின், சீரமைக்கப்பட்ட மொத்த வருவாயை, தொலைதொடர்பு துறை கணக்கிட்டதில் தவறுகள் உள்ளதாக கூறி, மீண்டும் கணக்கீடு செய்ய உத்தரவிடும்படி உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன.


latest tamil news


இந்த மனு நேற்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு அளித்த தீர்ப்பு:கடந்த ஆண்டு தொலைதொடர்பு நிறுவனங்களின் நிலுவையை தவணையில் செலுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அப்போது, இனி சீரமைக்கப்பட்ட மொத்த வருவாய் தொடர்பாக மறுமதிப்பீடு கோரக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதை ஏற்றுக் கொண்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் தற்போது வருவாயை மறுமதிப்பீடு செய்யக் கோரிக்கை விடுத்துள்ளன. இதை ஏற்க முடியாது. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பால் நேற்று பார்தி ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவைச் சந்தித்தன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202103:36:39 IST Report Abuse
Nepolian S ... என்னாச்சு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X