'டுவிட்டர்' அதிகாரிக்கு எதிரான 'நோட்டீஸ்' ரத்து

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெங்களூரு,-'டுவிட்டர் இந்தியா' தலைமை அதிகாரி மணிஷ் மகேஸ்வரிக்கு எதிராக உத்தர பிரதேச மாநில போலீசார் பிறப்பித்த, 'நோட்டீஸை' ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த அப்துல் சமத் என்ற முதியவரை சிலர் கடுமையாக தாக்கும் வீடியோ, டுவிட்டர் சமூக வலைதளத்தில் சில மாதங்களுக்கு முன் வேகமாக பரவியது. இந்த

பெங்களூரு,-'டுவிட்டர் இந்தியா' தலைமை அதிகாரி மணிஷ் மகேஸ்வரிக்கு எதிராக உத்தர பிரதேச மாநில போலீசார் பிறப்பித்த, 'நோட்டீஸை' ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.



latest tamil news



உத்தர பிரதேசத்தின் காசியாபாத்தை சேர்ந்த அப்துல் சமத் என்ற முதியவரை சிலர் கடுமையாக தாக்கும் வீடியோ, டுவிட்டர் சமூக வலைதளத்தில் சில மாதங்களுக்கு முன் வேகமாக பரவியது. இந்த வீடியோவை நீக்கும்படி டுவிட்டர் நிறுவனத்துக்கு உ.பி., போலீசார் அறிவுறுத்தினர். எனினும் அதை நீக்க, டுவிட்டர் நிர்வாகம் முதலில் மறுத்தது. பல்வேறு அழுத்தங்களுக்கு பின் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், கலவரத்தை துாண்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ், டுவிட்டர் இந்தியா மீது, உ.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி, டுவிட்டர் இந்தியா தலைவர் மணிஷ் மகேஸ்வரிக்கு, 'நோட்டீஸ்' அனுப்பி வைக்கப்பட்டது.அந்த நோட்டீசுக்கு எதிராக, பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் மணிஷ் மகேஸ்வரி முறையிட்டார். பின், அவர் மீது நடவடிக்கை எடுக்க, உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தி விசாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.


latest tamil news



இந்த மனு, நீதிபதி நரேந்தர் அடங்கிய ஒரு நீதிபதி அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிஷ் மகேஸ்வரிக்கு எதிராக, உ.பி., போலீசார் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202120:47:07 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0 Please don't repeat the same comm
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
24-ஜூலை-202114:14:25 IST Report Abuse
GANESUN உபி அரசாணையை பெங்களூர் நீதிமன்றம் ரத்து செய்து சட்டம் தன் கடமையை செய்தது.. ட்விட்டர் வென்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X