வரும் குளிர்காலத்தில் கோவிட்டின் புதிய ரகம்- பிரஞ்சு விஞ்ஞானி தகவல்

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பாரிஸ்: கோவிட்தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வந்தாலும் அதன் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன.இதனால் மக்கள் வழக்கம்போல பொது இடங்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். இந்தியாவில் உருவாகிய டெல்டா ரக வைரஸ், துவக்கத்தில் கிழக்காசிய நாடுகளை மட்டுமே அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது உலகின் பல

பாரிஸ்: கோவிட்தாக்கம் உலகமெங்கிலும் அதிகரித்து வந்தாலும் அதன் வீரியம் படிப்படியாகக் குறைந்து வருவதால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டன.



latest tamil news



இதனால் மக்கள் வழக்கம்போல பொது இடங்களுக்குச் செல்லத் துவங்கிவிட்டனர். இந்தியாவில் உருவாகிய டெல்டா ரக வைரஸ், துவக்கத்தில் கிழக்காசிய நாடுகளை மட்டுமே அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது உலகின் பல நாடுகளில் டெல்டா அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வைரஸ் இன்னும் எவ்வாறெல்லாம் உருமாறும் என்று உலகம் முழுக்க விஞ்ஞானிகள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத்தொடர்ந்து தற்போது பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான குழுமத் தலைவர் ஜீன் பிரான்காய்ஸ் இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில் வரும் குளிர்காலத்தில் கொரோனா புதுவிதமாக உருமாற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


latest tamil news


இது தற்போது உள்ள ரகத்தைக் காட்டிலும் அபாயகரமானதா, அல்லது மிதமான பாதிப்பு உடையதா என இன்னும் சரியாகத் தெரியவில்லை எனக் கூறிய அவர் விரைவில் அதற்கான முடிவை தங்கள் குழு அறிவிக்கும் என்று கூறியுள்ளார்.

உலகம் வரவிருக்கும் ஆண்டுகளில் சந்திக்கும் மிகப்பெரிய சவால் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நாடுகள் தடுப்பூசி பற்றாக்குறையால் தவிக்கும் நாடுகள் என்னும் நிலைதான் எனக் கூறியுள்ளார்.

பிரான்சில் இன்னும் முழுமையாக ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீக்கப்படாத நிலையில் இவற்றை நீக்கலாமா, வேண்டாமா என்று பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் அவை திட்டமிட்டுவருகிறது. மேலவையின் ஒப்புதலுக்காக இந்த அவை காத்திருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202111:18:07 IST Report Abuse
ராமகிருஷ்ணன் சீனர்களை மட்டுமே தாக்கக் கூடிய கொரோனா வகையாக இருந்தால் மனம் ஆறுதல் அடையும். கொரோனா உற்பத்தி செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால் நன்றாக இருக்கும்
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202110:57:34 IST Report Abuse
Lion Drsekar உண்மையை சொல்வதற்கும் பயமாக இருக்கிறது, உயிருக்கு பயமில்லை நம் இனத்தாருக்கு ஆபத்து ஒன்று மட்டும் புரிந்து கொண்டால் நல்லது, யாருக்கும் எதுவுமே வராது அவரவர், அவரவர் உணவு முறைகளை சரியாக கடைப்பியடித்தால் மட்டுமே போதும், இந்திய பாரம்பரிய மருத்துவம் பாதுகாக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
BALOU - st-denis,பிரான்ஸ்
24-ஜூலை-202110:42:33 IST Report Abuse
BALOU முதலில் ஒருவரின் பெயரை போடும் பொழுது அவரை அந்த நாட்டில் எப்படி அழைப்பார்கள் என்று தெரிந்து கொண்டு போடுங்கள் அந்த விஞ்சானியின் பெயர் ழா பிரான்சுவா இப்படிதான் நிங்கள் எழுத வேண்டும் .எனது பெயர் பாலு பாண்டிச்சேரியில் எனது பிறந்த பதிவு எடுத்தால் BALOU இபடித்தான் இருக்கும் அதனால் பெயரை உங்கள் இஷ்டத்திற்கு மற்றாதிர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X