கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோவில் யானை பராமரிப்பு; அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019

சென்னை-கோவில் யானைகளை பெரிய இடங்களில், இயற்கை சூழலில் பராமரிக்க கோரிய வழக்கில், தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


சென்னையை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலரான முரளிதரன் என்பவர் தாக்கல் செய்த மனு:தமிழக கோவில்களில் 34 யானைகள், புதுச்சேரியில் உள்ள கோவிலில் ஒரு யானையும் பராமரிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் அலட்சியத்தால், 2016 முதல், 2019 வரை, மூன்று கோவில் யானைகள் இறந்தன.

உடல் பருமன், காலில் ஏற்படும் பிரச்னையால், யானைகள் இறக்கின்றன.கோவில் யானைகளை நடை பயிற்சிக்கு கூட்டிச் செல்வதில்லை; முறையான உணவு வழங்கப்படுவது இல்லை. யானைகளை குறுகிய இடத்தில் அடைத்து வைக்கின்றனர். 'கான்கிரீட்' தரையில் நிற்க வைக்கின்றனர்.பெரிய அளவிலான இடங்களில் யானைகளை வைப்பது தான் வசதியாக இருக்கும். தரைப்பகுதியில் களிமண் இருக்க வேண்டும். நீண்ட நேரமாக நின்று கொண்டிருப்பதால், காலில், மூட்டுகளில் பிரச்னை ஏற்படுகிறது.யானைகளுக்கு வெவ்வேறு விதமாக, உணவு வழங்கப்பட வேண்டும். புரதம், நார்ச்சத்து கலந்த உணவு வழங்க வேண்டும். உணவு பொருள் வாங்குவதிலும் ஊழல் நடப்பதால், ஒரே மாதிரியான பசுமை உணவை மட்டுமே வழங்குகின்றனர்.எனவே, கோவில் அருகில் இயற்கை சூழல் நிறைந்த இடத்தில், யானைகளை பராமரிக்க வேண்டும். ஆண் யானைக்கு துணையாக, பெண் யானையையும் பராமரிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது


latest tamil news



.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், விசார ணைக்கு வந்தது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Suresh Kumar - Salem,இந்தியா
24-ஜூலை-202111:29:52 IST Report Abuse
Suresh Kumar இந்த அறமற்ற துறை கோவில்களில் இருக்கும் வரை நேர்மையை எதிர்பார்க்க முடியாது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202111:10:09 IST Report Abuse
Lion Drsekar "வெவ்வேறு விதமாக, உணவு வழங்கப்பட வேண்டும். புரதம், நார்ச்சத்து கலந்த உணவு" இவை அனைத்தும் கோவிலுக்காக பணியாற்றுபவர்களுக்கு வழங்கப்படுவது பாராட்டவேண்டும், ஒரு நாட்டுக்கே பணம் போதவில்லையென்றால் திருக்கோவில்களின் வருமானம் கைகொடுக்கிறது பாராட்டவேண்டும், வந்தே மாதரம்
Rate this:
Cancel
24-ஜூலை-202110:47:15 IST Report Abuse
ஸாயிப்ரியா கோயில் நிலம் சிலைகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில். யானை? ஆலோசனைக் குழு அமைத்து தான் முடிவு எடுக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X