ஓட்டுச்சாவடி முறைகேடு; சுப்ரீம் கோர்ட் அதிரடி

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி-'தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு உள்ளிட்டவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுச் சாவடியில் கலவரம் ஏற்படுத்திய வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை பெற்ற லக்ஷ்மண் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல்

புதுடில்லி-'தேர்தல்களின்போது ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டு உள்ளிட்டவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil newsஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் ஓட்டுச் சாவடியில் கலவரம் ஏற்படுத்திய வழக்கில் ஆறு மாத சிறை தண்டனை பெற்ற லக்ஷ்மண் சிங் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார்.விசாரணைக்கு பின், மனுவை நேற்று தள்ளுபடி செய்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு பிறப்பித்த உத்தரவு: ஓட்டளிக்கும் உரிமை, தனி மனிதனின் கருத்து சுதந்திரம். தேர்தல் முறையின் கோட்பாடு, வாக்காளர்களின் சுதந்திரமான, தனிப்பட்ட எண்ணத்தை பிரதிபலிப்பதை உறுதி செய்வதாக இருக்க வேண்டும்.

எனவே ஓட்டுச்சாவடிகளை கைப்பற்றுதல், கள்ள ஓட்டுப் போடுதல் உள்ளிட்ட எந்த முயற்சிகளையும், இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.இல்லாவிடில் நாட்டில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயகமும் கடுமையாக பாதிக்கப்படும். ஜனநாயகத்தை வலுப்படுத்த ஓட்டளிப்பில் ரகசியம் காக்கப்பட வேண்டியதும் அவசியம்.நேரடி தேர்தல் நடக்கும் ஜனநாயக நாடுகளில் வாக்காளர் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.


latest tamil news


ஏனெனில் அவரது ஓட்டு விபரம் வெளியாவது, அவரை பாதிப்பிற்கு உள்ளாக்கும்.ஜனநாயகம் மற்றும் சுதந்திரமான, நியாயமான தேர்தல் என்பது அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் முக்கிய பகுதி. இது, மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் வழிமுறை. இதனை செல்லாததாக்கும் நடவடிக்கைகளை, ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
24-ஜூலை-202120:03:50 IST Report Abuse
M  Ramachandran அரசில் வாதிகளில் யார் அவர்களை ஒடுக்குவது. அவர்களை அவர்களெ தண்டித்து கொள்ளும் புதுமை இந்தியாவில் நடக்குமா?
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
24-ஜூலை-202112:14:19 IST Report Abuse
Sriram V Than whole communist in Kerala and trinammmoool in bengal in jail
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202111:07:04 IST Report Abuse
Lion Drsekar இதே போன்று கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, வழிப்பறி, நில அபகரிப்பு, இரயில் மறியல், பொது சொத்துக்கு தீ வைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு என்றைக்கு அடக்குகிறார்க்ளோ அன்றுதான் சுதந்திரம் அடைந்ததன் பயன் கிடைக்கும், இங்கு தேர்தல் மற்றும் சமாதிக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது வருத்தம் அளிக்கிறது . வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X