சால்வை, பூங்கொத்து வேண்டாம்: பா.ஜ., அண்ணாமலை அறிவிப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சால்வை, பூங்கொத்து வேண்டாம்: பா.ஜ., அண்ணாமலை அறிவிப்பு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (34)
Share
சென்னை: 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள், தலைவர்கள் யாரும், இனிமேல் பூங்கொத்து, சால்வை கொண்டு வர வேண்டாம். ஒரே நாடு பத்திரிகைக்கு சந்தா செலுத்துங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.அண்ணாமலை தன் கைப்பட எழுதிய கடிதத்தை, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது. கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என்னை சந்திக்க வரும் போது, பூங்கொத்து, மலர் மாலை, மலர்
Annamalai, BJP,Bharatiya Janata Party, அண்ணாமலை

சென்னை: 'தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, தன்னை சந்திக்க வரும் தொண்டர்கள், தலைவர்கள் யாரும், இனிமேல் பூங்கொத்து, சால்வை கொண்டு வர வேண்டாம். ஒரே நாடு பத்திரிகைக்கு சந்தா செலுத்துங்கள்' என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ணாமலை தன் கைப்பட எழுதிய கடிதத்தை, தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ளது. கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: என்னை சந்திக்க வரும் போது, பூங்கொத்து, மலர் மாலை, மலர் கிரீடம் போன்றவற்றை கொண்டு வருவதை தவிர்க்க, அன்போடு வேண்டுகிறேன். நமது கட்சியின் பத்திரிகையான, 'ஒரே நாடு' மாதமிருமுறை இதழுக்கு ஆண்டு சந்தா; 3 ஆண்டுகளுக்கான சந்தா செலுத்துவது, எனக்கு சால்வை, மலர் மாலை அணிவிப்பதை விட பெரும் மகிழ்வு தரும்.


latest tamil news


இதையே நாம் பெரிதும் விரும்புகிறேன். நமது கட்சி இதழை ஆதரிப்பதன் வாயிலாக, நமது சித்தாந்தம், நமது சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்வோம். உங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன். இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதி, அக்கட்சி பத்திரிகையான, முரசொலி'க்கு பல யுக்திகளை பயன்படுத்தி சந்தா வசூலிப்பார். அதே வழியை, அண்ணாமலையும் பின்பற்றுகிறார். தமிழகத்தின் பிரதான கட்சிகளுக்கு, பிரத்யேகமாக ஒவ்வொரு பத்திரிகை உள்ளது. அதேபோல, பா.ஜ.,வின், ஒரே நாடு பத்திரிகையை, பெரிய அளவில் கட்டமைக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார் எனவும், கட்சியினர் கூறுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X