பொது செய்தி

இந்தியா

'அமேசான் கிண்டில்' போட்டி முடிவு வெளியீடு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி-தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 'அமேசான் கிண்டில்' நிறுவனம் நடத்திய புனைவு எழுத்தாளர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியாகி உள்ளன.'அமேசான் கிண்டில்' நிறுவனம் புனைவு எழுத்தாளர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன், நான்காம் ஆண்டு போட்டி முடிவுகள்

புதுடில்லி-தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 'அமேசான் கிண்டில்' நிறுவனம் நடத்திய புனைவு எழுத்தாளர்களுக்கான போட்டி முடிவுகள் வெளியாகி உள்ளன.


latest tamil news



'அமேசான் கிண்டில்' நிறுவனம் புனைவு எழுத்தாளர்களுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதன், நான்காம் ஆண்டு போட்டி முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாயின. இதில் தமிழ் நாவல் பிரிவில் எழுத்தாளர் அராத்து எழுதிய 'ஓப்பன் பண்ணா' என்ற நாவல் பரிசு பெற்றுள்ளது.



latest tamil news


ஆங்கிலத்தில் அபெக் ஷா ராவ் எழுதிய 'தி மஹாராஜாஸ் பேக் பியான்ஸி' மற்றும் ஹிந்தியில் தீப்தி மிட்டல் எழுதிய 'ஓயே மாஸ்டர் கே லாண்ட்' என்ற நாவலும் பரிசு பெற்றுள்ளன.குறுநாவலுக்கான தமிழ் பிரிவில் எழுத்தாளர் சசிகலா முருகேசன் எழுதிய 'தாயுமானவன்' பரிசு பெற்றுள்ளது.நாவலுக்கான பரிசு பெற்றவர்களுக்கு, தலா 5 லட்சம் ரூபாயும், குறுநாவலுக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஜூலை-202120:28:17 IST Report Abuse
நந்தினி, ஈரோடு திறமையையோ நல்ல எழுத்தையோ வைத்து பரிசு கொடுப்பதில்லை. மட்டமான படைப்பானாலும் பரவாயில்லை யார் நிறைய மார்க்கெட்டிங் பண்ணி அதிகம் பேரை வாசிக்க (?) வைக்கிறார்களோ அவர்களுக்கே வாய்ப்பு. லாட்டரி சீட்டு போலத்தானோ!
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
24-ஜூலை-202114:13:11 IST Report Abuse
VELAN S எப்ப நடக்குது ,எங்கே நடக்குது சொல்ல மாட்டீங்களா, போட்டி முடிந்த பிறகு செய்தி போட்டா என்ன செய்ய, நாம எல்லோரும் இருக்கிற வாய்ப்பை நழுவ விட்டு விட்டோமே. ஆகவே , தினமலர் நீங்க இதுமாதிரி ஒரு போட்டி நடத்துங்க, நான் ஜெயிச்சு காட்டறேன் , என்னோட ஒவ்வொவொரு தினமலர் லெட்டரை வாசிச்சு பாருங்க , அவைகள் சமூக சிந்தனையுடன் எழுதப்பட்டிருக்கும். மேலும் , நான் தினமலரில் நடுவு நிலைமையுடன் தான் கருத்துக்களை சொல்லி வந்திருக்கிறேன், நான் எப்பக்கமும் சாயாத பாபா , ஆமா சொல்லிப்புட்டேன் .
Rate this:
Cancel
A.Muralidaran - Chennai,இந்தியா
24-ஜூலை-202114:06:21 IST Report Abuse
A.Muralidaran அராத்தூ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X