பதக்க வாய்ப்பை தவற விட்ட இளவேனில், சவுரப் சவுத்ரி

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
டோக்கியோ : ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இன்று நடந்த தகுதி சுற்று போட்டியில், இந்தியாவின் இளவேனில், சவுரப் சவுத்ரி முறையே 16, 36வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேற தவறினர்.ஜப்பான் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியா சார்பில் 15 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் பெரிய ஏமாற்றம் கிடைத்தது. இம்முறை இப்படி நடக்காது, எப்படியும் இரண்டு அல்லது அதற்கும்
Tokyo Olympics, air rifle, Elavenil Valarivan, Apurvi Chandela

டோக்கியோ : ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இன்று நடந்த தகுதி சுற்று போட்டியில், இந்தியாவின் இளவேனில், சவுரப் சவுத்ரி முறையே 16, 36வது இடம் பிடித்து பைனலுக்கு முன்னேற தவறினர்.

ஜப்பான் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதலில் இந்தியா சார்பில் 15 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். ரியோ ஒலிம்பிக்கில் பெரிய ஏமாற்றம் கிடைத்தது. இம்முறை இப்படி நடக்காது, எப்படியும் இரண்டு அல்லது அதற்கும் மேல் என்ற எண்ணிக்கையில் பதக்கம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


latest tamil news


பெண்கள் 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவில் 'நம்பர்-1' வீராங்கனை, இந்தியாவின் இளவேனில், மூன்று முறை உலக கோப்பை தங்கம் வென்ற அபுர்வி சண்டேலா, பங்கேற்றனர். அவர்கள் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வென்று தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளவேனில் 626.5 புள்ளிகள் மட்டுமே எடுத்து 16வது இடம் பிடித்தார். 621.9 புள்ளிகள் எடுத்த அபுர்விக்கு 36வது இடம் கிடைத்தது. 'டாப்-8' மட்டுமே பைனலுக்கு முன்னேறுவார்கள் என்பதால், இருவரும் பதக்க கனவை தவற விட்டனர்.

இப்பிரிவில், நார்வே வீராங்கனை ஜெனட் ஹெக் (632.9) முதலிடமும், தென்கொரியாவின் பார்க ஹேமன் (631.7) இரண்டாவது இடமும், அமெரிக்காவின் மேரி டக்கர் (631.4) மூன்றாவது இடமும் பிடித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
24-ஜூலை-202117:09:07 IST Report Abuse
vnatarajan வெற்றி தோல்வி எல்லாம் விளையாட்டு போட்டிகளில் சகஜம். ஆகையால் இவர்கள் நடந்ததை மறந்துவிட்டு அடுத்த ஒலிம்பிக்கிற்கு முன்னேர வேண்டும்
Rate this:
Cancel
ஸ்ரீனிவாசன் வெங்கடேசன் இளவேனில் க்கு ஒரு அறிவுரை யார் சொல்வதையும் காதில் வாங்காமல் உங்கள் திறமையை மட்டும் வளருங்கள் , உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள் நீங்கள் கண்டிப்பாக வெற்றி பெறுவீர்கள்
Rate this:
விசு பாய் , சென்னைசீனிவாசன் வெங்கடேசன் சொன்னதும் அறிவுரை தானே. நீங்கள் இளவேனில் வாலறிவனுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்....
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்தாங்கள் சொல்வதையுமா? உலகில் யாரும் கேட்காமலே கிடைப்பது அறிவுரைகள்...
Rate this:
Cancel
Veeraputhiran Balasubramoniam - Chennai,இந்தியா
24-ஜூலை-202113:10:16 IST Report Abuse
Veeraputhiran Balasubramoniam தலைப்பு "பதக்கத்தினை நெருக்கிய வீரர்கள்" என ஒலிம்பிக் முடியும் வரை அவர்களது ரேங்க்கை இருபத்திஐந்துக்குள், ஐம்பதுக்குள் நூருக்குள் என பதிவிட்டால் அவர்களுக்கும் பெருமை நம் நாட்டுக்கும் பெருமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X