சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து கடவுள், பிரதமர், அமைச்சரை விமர்சித்த பாதிரியார் கைது

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (159)
Share
Advertisement
மதுரை: இந்து கடவுளை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ

மதுரை: இந்து கடவுளை விமர்சித்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரையில் கைது செய்யப்பட்டார். இவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.latest tamil news
கன்னியாகுமரி மாவட்டம் பனங்கரையில் சர்ச் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பிரார்த்தனை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. இதை கண்டித்து அருமனையில் அருமனை கிறிஸ்தவ இயக்கம், ஜனநாயக கிறிஸ்தவ பேரவை, முஸ்லிம் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா இந்து கடவுள், அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை கடுமையாக விமர்சித்து பேசினார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரவியது. மேலும் அவரை கைது செய்ய வேண்டும் என பலர் குரல் எழுப்பினர்.


latest tamil newsவெளிநாடு செல்ல திட்டமா ?


இந்நிலையில் சென்னைக்கு காரில் 4 பேருடன் தப்பி செல்கிறார் என்ற தகவல் போலீசுக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து மதுரை கருப்பாயூரணி அருகே சோதனை நடத்திய போது ஒரு காரில் பாதிரியார் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் கைது செய்தனர். அவரை கள்ளிக்குடி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை, கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியனிடம் , மதுரை மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை சென்று வெளிநாடு செல்ல திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.


குழித்துறை மறைமாவட்டம் பாதிரியாருக்கு கண்டனம்


பொன்னையா விவகாரம் தொடர்பாக குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக நிர்வாகி பேராயர் அந்தோணி பாபுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமய ஒற்றுமை, தேசிய ஒருமைபாடு, அமைதி, வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு, ஆகியன அவசியமானது. எல்லோரும் சகோதரர்களே என்று மதங்களை கடந்து மனித நேயத்திற்காக அழைப்பு விடுத்து வரும் திருத்தந்தை பிரான்சிஸ் பாதையில் நடந்து வருகிறோம். எனவே குழித்துறை மறை மாவட்டம் ஒரு போதும் வன்முறையை தூண்டாது. பிறரது மனதில் காயங்களை ஏற்படுத்தும் விதமாக கேலி பேச்சுகளை ஆதரிப்பதில்லை. பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கருத்துக்கள் மறைமாவட்ட கருத்துக்கள் அல்ல. இதற்கும் ஜனநாயக கிறிஸ்துவ பேரவைக்கும், குழி்த்துறை மறை மாவட்டத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரது பேச்சு கண்டனத்திற்குரியது. சமூக நல்அமைதி மதநல்லிணக்கம் காப்பாற்ற வேண்டிய கடமை பொறுப்பு எங்களுக்கு உண்டு. இதில் தமிழக கத்தோலிக்க கிறிஸ்துவ சமூகம் மிக உறுதியாக இருக்கிறது. அதற்கு தமிழக அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் எங்கள் அமைப்பு உறுதுணையாக இருக்கும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


குண்டர் சட்டம் பாயுமா ?


இந்திய இஸ்லாமிய முன்னேற்ற கூட்டமைப்பின் தலைவர் முகம்மது பெரோஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் பாதிரியார் பொன்னையா பேச்சு கண்டிக்கத்தக்கது. பிரதமரையும், அமைச்சரையும் தரக்குறைவாக பேசிய இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். முகமது நபி அவர்களை அவதூராக பேசிய கல்யாணராமன் குண்டர்சட்டத்தில் கைது செய்யபட்டதை நினைவு படுத்த விரும்புகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது

Advertisement
வாசகர் கருத்து (159)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-ஜூலை-202110:20:20 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan சிறையில் ல போடுங்க சார் , குண்டர் சட்டத்தில் போடுங்க சார் ..கண் துடைப்பாக இல்லாமல் , கோர்ட் கு அனுப்பி , பெரிய தண்டனை வாங்கி குடுங்க சார் ..ஹிந்து வோட மன கஷ்டத்தை புரிந்து , இந்த மாதிரி ஆட்களுக்கு , தண்டனை வாங்கி கொடுக்கவும் ..இது போல யாரும் , எப்பவும் பேச கூட த படி , தண்டனை இருக்கனும்
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
26-ஜூலை-202109:03:32 IST Report Abuse
சீனி அமெரிக்காவுல இருந்து வர்ர பணத்தில வாங்கின சொகுசு கார் பாருங்க. இவனுக்கு சொறி சிறங்கு பிடிக்கும் இந்த மண்ணில் பாடுபடும் ஏழை விவசாயி ஒழுக்கமா விவசாயம் பண்ணினா இந்த மாதிரி கார் வாங்க முடியுமா ? ஜனநாயகம்னு நாட்டை ஏலத்திற்க்கு விட்டதுதான் லாபம். 100கிமீ ஒரு சர்ச் இல்லன்னா மட்டும் புதிய சர்ச்சுக்கு அனுமதி கொடுங்க அப்ப தான் இவனுங்க திருந்துவாங்க. இல்லன்னா நாட்டை ஏலம் விட்டுவிடுவார்கள்.
Rate this:
Cancel
25-ஜூலை-202108:30:11 IST Report Abuse
கார்த்திக்     கோவை   பாரத் மாதா கீ ஜெய்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X