மாடர்னா தடுப்பூசியை 12 - 17 வயதினருக்கு செலுத்தலாம்: ஐரோப்பிய நிறுவனம் பரிந்துரை

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
லண்டன்: கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. பைசர் நிறுவன தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் செலுத்தப்படுகிறது. பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனையில் உள்ளன.இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 12 - 17 வயதினர்

லண்டன்: கோவிட் பெருந்தொற்றுக்கு எதிராக செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. பைசர் நிறுவன தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் செலுத்தப்படுகிறது. பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு செலுத்துவதற்கான பரிசோதனையில் உள்ளன.



latest tamil news



இந்நிலையில், அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை 12 - 17 வயதினர் 3,700க்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. இதில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் ஆன்டிபாடிகளுடன் ஒப்பிடும் அளவுக்கு சிறாரிடமும் இந்த தடுப்பூசி ஆன்டிபாடிகளை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டு உள்ளது.


latest tamil news



இதையடுத்து, 'மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம்' என, அமெரிக்க மருந்துகள் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளதை அடுத்து இந்த தடுப்பூசிக்கு ஐரோப்பிய நிறுவனம் ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X