பொது செய்தி

இந்தியா

குழந்தைகளுக்கு செப்., முதல் கோவாக்சின் தடுப்பூசி: எய்ம்ஸ் இயக்குநர் தகவல்

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
புதுடில்லி: 'குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும்' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்திருக்கிறார்.டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்து உள்ளதாவது:ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்காக தயாரித்துள்ள

புதுடில்லி: 'குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும்' என, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்திருக்கிறார்.


latest tamil news



டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்து உள்ளதாவது:ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்காக தயாரித்துள்ள கோவாக்சின் கோவாக்சின் தடுப்பூசியை குழந்தைகளுக்கு வழங்கி பரிசோதிக்கும் சோதனை டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் 7ம் தேதி தொடங்கியது. மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாடு அமைப்பின் வல்லுநர் குழு அனுமதியளித்து உள்ளதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.



latest tamil news



கோவாக்சின் தடுப்பூசியின் 3வது கட்ட கிளினிக்கல் பரிசோதனை முடிவடைந்து செம்படம்பர் மாதம் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு முடிவுகள் வெளியானால் அந்த மருந்தை குழந்தைகளுக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், செப்டம்பர் மாதத்திலிருந்து 2 முதல் 17 வயது வரை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த வாய்ப்பு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X