பொது செய்தி

இந்தியா

கேரளாவில் வேகமெடுக்கும் கோவிட் பாதிப்பு: கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
திருவனந்தபுரம்: இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க

திருவனந்தபுரம்: இந்தியாவில் கோவிட் பாதிப்பு நேற்று முன்தினம் 35 ஆயிரமாக இருந்தது. இந்நிலையில் நேற்று 39 ஆயிரத்தை தாண்டியது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 39,097 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் தொற்று பாதிப்பு கடந்த 50 நாட்களில் இல்லாத அளவு உயர்ந்ததே தினசரி பாதிப்பு திடீரென அதிகரிக்க முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. அங்கு நேற்று முன்தினம் 12,818 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,518 ஆக உயர்ந்தது.latest tamil newsகுறிப்பாக நேற்று, 1,28,489 மாதிரிகள் மட்டும் பரிசோதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு சதவீதம் 13.6 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக மலப்புரம் மாவட்டத்தில் கோவிட் பாதிப்பு சதவீதம் 17ஆக உள்ளது. இதேபோல திருச்சூர், கோழிக்கோடு, எர்ணாகுளம், கொல்லம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளே தொற்று பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது.


latest tamil newsஇதையடுத்து அம்மாநிலத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளை முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். அதன்படி மத்திய - மாநில அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் இயங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்தியாவசிய கடைகள் மட்டும் திறக்கவும், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் பார்சல் மட்டும் வழங்கவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பரவல் அதிகமாக உள்ள பகுதிகளில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கவும், தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்தவும் அரசு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
25-ஜூலை-202102:33:05 IST Report Abuse
M  Ramachandran கேரளவும் இஙகுள்ள கம்யூனிஸ்டுகளும் எப்போதும் நம்மை குறைகூறியும் கேரளா வை உயர்த்தியும் கருத்து தெரிவிக்கும். ஆனால் இஙகுள்ள ஊடகங்கள் அதற்கு கண்டனங்கள் எழுப்புவதில்லை. முழுமூச்சாக தமிழ் ஊடகங்கள் மத்திய அரசை எதிர்ப்பதிலேயே (அவர்கள் தமிழகத்திரற்கு செய்யும் நல்லதை எடுத்து போட மனமில்லாமல்) கன்னும் கருத்துமாக செய்திகளை வெளியிடுகின்றன.ஓரவஞ்சனை கடந்த மூன்று ஆண்டுகளாக செய்கின்றன.
Rate this:
Cancel
vijay,Kovai -  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூலை-202122:10:53 IST Report Abuse
vijay,Kovai Indias 1st vivid patient in Kerala(gods own country)😂😅😂😭
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
24-ஜூலை-202121:40:18 IST Report Abuse
sridhar பக்ரீத் தந்த பரிசு . இனிமேல் கட்டுப்பாடாம் அதாவது a ஐயப்பன் கோவிலுக்கு , ஓணம் பண்டிகைக்கு . அட விளங்காத பயலுகளே .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X