குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி: 'மாடர்னா' நிறுவனத்துக்கு பெருமை

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
லண்டன்: ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நேற்று பரிந்துரைக்கப்பட்டது. இதனால் உலகில் குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது.ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவனத்தின்

லண்டன்: ஐரோப்பிய யூனியன் நாடுகளில் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நேற்று பரிந்துரைக்கப்பட்டது. இதனால் உலகில் குழந்தைகளுக்கான முதல் தடுப்பூசி என்ற பெருமை அதற்கு கிடைத்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் சார்பில் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியாக மாடர்னா நிறுவனத்தின் தடுப்பூசியை செலுத்த நேற்று பரிந்துரை செய்யப்பட்டது.இதன்படி சர்வதேச அளவில் 18 வயதிற்கு உட்பட்டோருக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் தடுப்பூசியாக மாடர்னா மாறியுள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியதாவது:ஐரோப்பிய நாடுகளில் மக்களுக்கு செலுத்தப்படும் மாடர்னா தடுப்பூசி 12 - 17 வயதிற்கு உட்பட்ட, 3,700க்கும் மேலானோரிடம் செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அப்போது அவர்கள் உடலில் போதிய கொரோனா எதிர்ப்பு சக்தி உருவானது.இதனால் ஐரோப்பிய யூனியன் முழுதும் 12 - 17 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மாடர்னா தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X