அரசியல் செய்தி

தமிழ்நாடு

லாட்டரி வேண்டாம்: பழனிசாமி எச்சரிக்கை

Updated : ஜூலை 24, 2021 | Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கருணாநிதி ஆட்சி காலத்தில் தான், வெளிமாநில லாட்டரிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில்
பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி, லாட்டரி திட்டம், திமுக, ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தில் மீண்டும் லாட்டரி சீட்டு திட்டத்தை கொண்டு வர வேண்டாம் என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கருணாநிதி ஆட்சி காலத்தில் தான், வெளிமாநில லாட்டரிகள் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குதிரை ரேஸ், சீட்டாட்டம் போல் லாட்டரி சீட்டு தமிழகத்தில் மாபெரும் சூதாட்டமாக மாறியது. தனியார் லாட்டரி ஏஜென்டகள், வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ள நோட்டு அச்சடிப்பது போல் அச்சிட்டு மக்களிடம் விற்றார்கள்.
ஏழை, எளிய மக்கள் லாட்டரி மயக்கத்தில் தங்கள் குடும்பத்தையும் வாழ்க்கையையும் இழந்தார்கள். தனியார் லாட்டரிகளால் பணம் இழந்த பல அப்பாவிகள் தற்கொலை செய்த அவலமும் நிலவியது. கடந்த 2003 ஜனவரி மாதம், அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒரே கையெழுத்தில் ஒரே இரவில் லாட்டரி சீட்டை தமிழகத்தில் ஒழித்த பெருமை ஜெயலலிதாவையே சாரும்.


latest tamil news



இந்நிலையில், மக்களின் தலையில் மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால், தற்போது பதவியில் உள்ள திமுகவின் விடியா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வருகிறது. ஆட்சி வருவதற்கு முன், அரசுக்கு வருவாயை பெருக்கும் வழி எங்களுக்கு தெரியும் என்று கொக்கரித்த இவர்கள், லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக முடிவு செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.
தனியார் லாட்டரி ஏஜென்ட்கள் கெள்ளை அடிக்கவும், அதன் மூலம் ஆட்சியாளர்கள் பெருத்த ஆதாயம் பெறுவதற்கான இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி திட்டத்தை திமுக அரசு கைவிட வேண்டும். அரசின் வருவாயை பெருக்கபல நல்ல வழிகளை தேட வேண்டும் லாட்டரி திட்டத்தை மீண்டும் கொண்டு வந்தால், தமிழக மக்களின் எதிர்ப்பை ஸ்டாலின் அரசு சந்திக்க நேரிடும். லாட்டரி சீட்டை மீண்டும் கொண்டு வர வேண்டாம் என அதிமுக சார்பில் எச்சரிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohideen.h - chennai,இந்தியா
25-ஜூலை-202107:08:12 IST Report Abuse
mohideen.h முன்னாள் முதல்வர் கலைஞர் வெளிமாநில லாட்டரி சீட்டுகளுக்கு அனுமதி அளித்தாலும் அதை கவனமுடன் போலி சீட்டுகள் புழக்கத்தில் இல்லாமல் கலைஞர் அரசு செயல்பட்டது, ஆனால் ஜெயலலித்தாவாள் அவ்வாறு முடியவில்லை ஆகயால் தான் லாட்டரி சீட்டை தடை செய்தார், இன்னும் பல மேல நாடுகளில் அரசே லாட்டரி சீட்டுகளை சிறப்பாக கையான்டு விற்பனை செய்கிரார்கள், அவ்வளவு ஏன் நம் நாட்டின் பல மாநிலங்களில் இன்றும் லாட்டரி சீட்டு உண்டு இது தெரியாமல் பழனிச்சாமி சாமி ஏதோ புழுகுறாரு ,,
Rate this:
Cancel
Nagercoil Suresh - India,இந்தியா
24-ஜூலை-202121:52:01 IST Report Abuse
Nagercoil Suresh யார் இவரிடம் சொன்னது? இவருக்கு எப்படி தெரிந்தது? ஆக மொத்தத்தில் இரண்டு கழக கம்பெனிகளுக்கும் மறை முகமாக நல்ல தொடர்வு உள்ளது தெரிய வருகிறது...10 கோடி தமிழர்களுக்கும் உடல் உழைப்பிற்கும் மன உழைப்பிற்கும் ஏதாவது வழி உண்டா என ஆராயுங்கள் அதைவிட்டு விட்டு மக்களை லாட்டரி அடிக்க வைத்துவிடாதீர்கள்...
Rate this:
Cancel
24-ஜூலை-202121:39:52 IST Report Abuse
அப்புசாமி லாட்டரி சீட்டு தவறானதல்ல. அதில் ஊழலைப் புகுத்தி மக்களை ஏமாற்றி ஆட்டையப் போடுவதுதான் தவறு. அமெரிக்காவில் வெளிமாநில லாட்டரிகள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மொத்தமா லாட்டரி டிக்கெட்டுகளை அச்சடிச்சு விக்க முடியாது. உங்கள் அதிருஷ்ட எண்களை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும். எல்லாத்துக்கும் மேலாக, லாட்டரியில் ஊழல் செஞ்சால் கோவணம் வரை உருவிட்டுதான் உடுவாங்க. இங்கே எல்லாம் நேர்மையும், திறமையும் இல்லாத தத்திகள். பணத்தை ஆட்டையப் போடுவதைத் தவிர எதுவும் தெரியாத விஞ்ஞானிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X