அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீட் தேர்வு குறித்து தெளிவான அறிவிப்பு: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
மதுரை: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் உணவக விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்படும் என கூறியதால் இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து


மதுரை: புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தனியார் உணவக விடுதியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது : திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மத்திய அரசு இந்த ஆண்டு கட்டாயமாக நீட் தேர்வு நடத்தப்படும் என கூறியதால் இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு நடத்துவது குறித்து தெளிவான அறிவிப்பை வெளியிட்டால் மட்டுமே மாணவர்களிடையே ஏற்படும் குழப்பத்தை தீர்க்க முடியும். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை நண்பர் என்ற முறையில் சந்தித்து பேசினேன். தமிழகத்தில் தடுப்பூசி இருப்பு குறித்து வெளிப்படைதன்மை இல்லாத நிலை உள்ளதால் தடுப்பூசி குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும், தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி என்ற அறிவிப்பு வரவேற்கதக்கது. அதனையும் முறைப்படுத்த வேண்டும் அதிலும் வெளிப்படைதன்மை வேண்டும்.

பெண்களுக்கு உரிமை தொகை, பெட்ரோல் விலை குறைப்பு , நகை கடன் ரத்து போன்ற திமுகவின் தேர்தல் அறிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை .திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவை ஒன்றியம் என அழைப்பது நம்மை நாமே சிறுமைபடுத்துவது போல உள்ளதால் திமுக தங்களது நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் எனவும், ஒன்றிய அரசு என அழைக்கப்படுவது தேசத்திற்கு எதிரானதாக பார்க்கப்பட வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X