பொது செய்தி

தமிழ்நாடு

சாதாரண பஸ்களில் 'டூட்டி' ஓட்டுனர், நடத்துனர் ஓட்டம்!

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும், சாதாரண பஸ்களில் பணி செய்ய, ஓட்டுனர், நடத்துனர்கள் ஆர்வம் காட்டாததால், பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகங்களின் வாயிலாக, தமிழகம் முழுதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், சாதாரண பஸ்களில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு,

சென்னை:அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும், சாதாரண பஸ்களில் பணி செய்ய, ஓட்டுனர், நடத்துனர்கள் ஆர்வம் காட்டாததால், பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களின் வாயிலாக, தமிழகம் முழுதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், சாதாரண பஸ்களில், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையருக்கு, இலவச பஸ் பயணம் அனுமதிக்கப் பட்டு உள்ளது.

கடந்த 12ம் தேதி முதல், இலவச பயணத்துக்கான டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில், பெண்கள், திருநங்கையர், மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் வகையில், சாதாரண பஸ்களின் எண்ணிக்கை, 7,225 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்த பயணியரில், 56 சதவீதம் பேர், இலவச பயணம் மேற்கொள்கின்றனர். அரசிடம் இருந்து, இலவச பயணியருக்கான மானியம் கிடைக்கும் என்பதால், அதிகாரிகளும் சாதாரண பஸ்களை இயக்க, ஆர்வம் காட்டுகின்றனர்.

அதேநேரம், சாதாரண பஸ்களில் இலவச பயணியரே அதிகம் இருப்பதால், வசூல் மிகவும் குறைந்து விடுகிறது. இதனால், தங்களுக்கான படித்தொகை கிடைப்பதில்லை. எனவே, உணவு, தேனீர், சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு, தங்கள் கையிலிருந்து செலவு செய்ய வேண்டி உள்ளது என்பதால், சாதாரண பஸ்களில் பணிபுரிய, ஓட்டுனர், நடத்துனர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், சாதாரண பஸ்களை இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:சாதாரண பஸ்களின், 'பேட்டா' விகிதத்தை அதிகரித்தால் தான், ஓட்டுனர், நடத்துனர்களால் சமாளிக்க முடியும். இதுகுறித்து, அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். அமைச்சரிடமும் கடிதம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X