பொது செய்தி

தமிழ்நாடு

குறுவை அறுவடை துவக்கம்

Added : ஜூலை 24, 2021
Share
Advertisement
சென்னை:தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா ஆகிய இரண்டு பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இப்பருவத்தில் விளையும் நெல், அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது. நடப்பாண்டு ஜூன் 12ம் தேதி, குறுவை பாசனத்திற்கு, சேலம் - மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி 3.50 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடிக்கு அரசு இலக்கு

சென்னை:தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், குறுவை, சம்பா ஆகிய இரண்டு பருவ நெல் சாகுபடி முக்கியமானது. இப்பருவத்தில் விளையும் நெல், அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.

நடப்பாண்டு ஜூன் 12ம் தேதி, குறுவை பாசனத்திற்கு, சேலம் - மேட்டூர் அணையில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட்டது. இதை பயன்படுத்தி 3.50 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடிக்கு அரசு இலக்கு நிர்ணயம் செய்தது. அதற்கு முன்பாக, ஏப்ரல், மே மாதங்களில், நிலத்தடி நீராதார வசதியுள்ள விவசாயிகள், குறுவை சாகுபடி பணிகளை துவக்கினர். முன்கூட்டியே சாகுபடி செய்யப்பட்ட குறுவை பயிர்கள், தற்போது, அறுவடைக்கு தயாராகி விட்டன. பல இடங்களில், விவசாயிகள் அறுவடையை துவக்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X