பொது செய்தி

தமிழ்நாடு

இடி, மின்னலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்க பேரிடர் ஆணையம் புதிய முயற்சி

Added : ஜூலை 24, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:இடி, மின்னல் போன்றவற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்காக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. மழை நேரங்களில் மேகத்தின் நடமாட்டத்தை பொறுத்து, இடி, மின்னல் உருவாகிறது. இதிலிருந்து வெளிப்படும் மின்சாரம், பூமியை அடையும் போது, ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக, 60 பேர் வரை இடி, மின்னல்

சென்னை:இடி, மின்னல் போன்றவற்றால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்காக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது.

மழை நேரங்களில் மேகத்தின் நடமாட்டத்தை பொறுத்து, இடி, மின்னல் உருவாகிறது. இதிலிருந்து வெளிப்படும் மின்சாரம், பூமியை அடையும் போது, ஆங்காங்கே உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தமிழகத்தில் ஆண்டுதோறும் சராசரியாக, 60 பேர் வரை இடி, மின்னல் தாக்கி உயிரிழக்கின்றனர். குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட வறட்சியான மாவட்டங்களில், இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு, 35 பேர் இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தனர். நடப்பாண்டில் இதுவரை, 13 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.இதுபோன்று இடி, மின்னல் ஏற்படும் போது, 'ரேடார்' வாயிலாக, அதை முன்கூட்டியே கண்காணித்து, உயிரிழப்புகளை தடுக்க முடியும்.இதற்காக, மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வாயிலாக, மஹாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள ஐ.ஐ.டி.எம்., எனப்படும் வெப்ப மண்டல ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, 'டாமினி' செயலியை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், இடி, மின்னல் குறித்த தகவல்கள், 30 நிமிடம் முதல், ஒரு மணி நேரத்திற்கு முன் கிடைத்து விடும். இதன் வாயிலாக உயிரிழப்புகளை தடுக்க முடியும்.பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், முதல்நிலை மீட்பாளர்கள் அனைவருக்கும், டாமினி மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்து, மக்களுக்கு முன்னெச்சரிக்கை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இடி, மின்னலில் இருந்து தற்காத்து கொள்ள செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, பொதுமக்களுக்கு புரியும்படி விளக்குவதற்காக, அனிமேஷன் வீடியோவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை, செய்தித்துறை வாயிலாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் ஒளிபரப்பவும், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும், இடி, மின்னல் முன்னெச்சரிக்கை தகவல்களை பெற முடியும்.இவற்றின் வாயிலாக, வரும் காலங்களில் இடி, மின்னல் உயிரிழப்புகள் தவிர்க்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
25-ஜூலை-202107:30:27 IST Report Abuse
Loganathan Kuttuva Lightning arresters are installed in tall buildings and cell towers to earth the lightning voltage.The area near to this lightning arresters are also well protected.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X